ஓம் பிரகாசு மாத்தூர்
ஓம் பிரகாசு மாத்தூர் (Om Prakash Mathur; பிறப்பு சனவரி 2,1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய சிக்கிம் மாநில ஆளுநரும் ஆவார். இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆவார். ஆரம்பத்தில், இவர் பைரோன் சிங் செகாவத்தால் வளர்க்கப்பட்டார். ஆனால் பின்னர் இவர் பாஜகவில் செல்வாக்குப் பெற்ற தலைவராக ஆனார். இவர் ஆர். எஸ். எஸ். பிரச்சாரகராகவும் பின்னர் குசராத்து பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.
ஓம் பிரகாசு மாத்தூர் | |
---|---|
18th சிக்கிம் ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 சூலை 2024 | |
முன்னையவர் | லட்சுமன் ஆச்சார்யா |
மாநிலங்களவை உறுப்பினர்-இராசத்தான்[1] | |
பதவியில் 5 சூலை 2016 – 4 சூலை 2022 | |
முன்னையவர் | ஆசுக் அலி தாக் |
பின்னவர் | ரண்தீப் சுர்ஜேவாலா |
தொகுதி | இராசத்தான் |
பதவியில் 2008–2014 | |
தொகுதி | இராசத்தான் |
மாநிலத் தலைவர்-பாஜக | |
பதவியில் 2008-2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1952 பாலி, இராசத்தான், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | ஆளுநர் இல்லம், கேங்டாக், சிக்கிம், India |
மாநிலங்களவை உறுப்பினர்
தொகு2016 மே 29 அன்று, சூன் 11 அன்று நடைபெற்ற மாநிலங்களவை இரு வருடத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களில் ஒருவராக இவர் இராசத்தானிலிருந்து போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.[2]
பிறப்பும் கல்வியும்
தொகுஓம் பிரகாசு மாத்தூர் இராசத்தானின் பாலி மாவட்டத்தின் பாலி வட்டத்தில் உள்ள பால்னா அருகிலுள்ள பெடல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1952-இல் பிறந்த இவர், ஜெய்ப்பூரில் உள்ள இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
ஆளுநராக
தொகுஓம் பிரகாசு மாத்தூரை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 27 சூலை 2024 அன்று சிக்கிம் ஆளுநராக நியமித்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Iqbal, Mohammed (12 June 2016). "BJP wins all seats from Rajasthan". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/BJP-wins-all-seats-from-Rajasthan/article14417083.ece.
- ↑ . 29 May 2016.
- ↑ Mallick, Ashesh (28 July 2024). "President appoints 6 new Governors including Om Prakash Mathur, Santosh Gangwar, reshuffles 3 others". India TV News இம் மூலத்தில் இருந்து 28 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240728050455/https://www.indiatvnews.com/news/india/president-murmu-appoints-new-governors-gangwar-goes-to-jharkhand-gulab-chand-kataria-to-punjab-manipur-telangana-maharashtra-latest-updates-2024-07-28-944002.
- [1]
- [2] பரணிடப்பட்டது 2011-05-17 at the வந்தவழி இயந்திரம்