ஓலா வாடகை வண்டிகள்
ஓலா கேப்ஸ் (Ola Cabs) என்பது போக்குவரத்து வலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலை தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து மேலும் தனது சேவையை பெங்களூரிலும் தொடர்ந்தது. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அன்று பாவேசு அகர்வால் என்பவரால் துவங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் 100 நகரங்களில் 2,00,000 வாடகைக் கார்களைக் கொண்டு பெருகியுள்ளது. தற்போதைய சூழலில் இந்நிறுவனம் தொழிலாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் முற்பட்டுள்ளது.[2]
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
வர்த்தகப் பெயர் | ஓலா |
நிறுவனர்(கள்) | பவிசு அகர்வால் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தொழினுட்பம் |
சேவைகள் | வாடகையுந்து, வாடகை வாகனங்கள் |
வருமானம் | ₹418.25 கோடி (US$52 மில்லியன்)[1] |
இலாபம் | ₹−754.87 கோடி (US$−95 மில்லியன்) |
பணியாளர் | 7000 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Chakraborty, Sayan (23 June 2016). "Ola revenue rises eight-fold to Rs418 crore". Mint. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
- ↑ பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது ஓலா தி இந்து தமிழ் 4 செப்டம்பர் 2016