ஓல்மியம்(III) நைட்ரேட்டு
ஓல்மியம்(III) நைட்ரேட்டு (Holmium(III) nitrate) என்பது Ho(NO3)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1]. ஓல்மியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து ஓல்மியம்(III) நைட்ரேட்டு உப்பு உருவாகிறது. மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரில் கரையும். படிக நீரேற்றுகளையும் உருவாக்கும்.[2]
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓல்மியம் முந்நைட்ரேட்டு, ஓல்மியம் நைட்ரேட்டு, ஓல்மியம் டிரைநைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10168-82-8 14483-18-2 35725-31-6 | |
ChemSpider | 26948008 21241428 34196 |
EC number | 233-438-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
பப்கெம் | 25021754 37257 |
| |
பண்புகள் | |
Ho(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 350,95 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
உருகுநிலை | 754 °C (1,389 °F; 1,027 K) |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H272, H315, H319, H335 | |
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநைட்ரசனீராக்சடு மற்றும் ஓல்மியம்(III) ஆக்சைடு சேர்மங்கள் வினைபுரிவதால் நீரற்ற நிலை ஓல்மியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:
உலோக ஓல்மியத்துடன் நைட்ரசனீராக்சடு வினைபுரிந்தாலும் ஓல்மியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது :
ஓல்மியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்தால் ஓல்மியம்(III) நைட்ரேட்டு உருவாகும்:
இயற்பியல் பண்புகள்
தொகுஓல்மியம்(III) நைட்ரேட்டு மஞ்சள் நிற படிகங்களாக உருவாகிறது.
Ho(NO3)3•5H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக நீரேற்றை உருவாக்குகிறது.[3]
நீர் மற்றும் எத்தனாலில் கரைகிறது.
வேதிப் பண்புகள்
தொகுநீரேற்றப்பட்ட ஓல்மிடிக் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து HoONO3 சேர்மத்தை கொடுக்கிறது. அடுத்தடுத்த வெப்பப்படுத்தும் போது ஓல்மியம் ஆக்சைடாக சிதைகிறது.
பயன்கள்
தொகுபீங்கான்கள் மற்றும் கண்ணாடி உற்பத்திக்கு ஓல்மியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.
உலோக ஒல்மியத்தை உற்பத்தி செய்வதற்கும் இரசாயன வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Лидин, Ростислав; Молочко, Вадим; Андреева, Лариса (2 February 2019). Константы неорганических веществ. Справочник (in ரஷியன்). Litres. p. 40. ISBN 978-5-04-077039-7. Retrieved 18 August 2021.
- ↑ "14483-18-2 - Holmium(III) nitrate pentahydrate, REacton®, 99.9% (REO) - 14588 - Alfa Aesar". Alfa Aesar. Retrieved 18 August 2021.
- ↑ "Holmium(III) nitrate pentahydrate". Sigma Aldrich. Retrieved 18 August 2021.