ஓ. மாதவன்

இந்திய திரைப்பட நடிகர்

ஓ. மாதவன் ( O. Madhavan ) (1922 - 19 ஆகஸ்ட் 2005) ஓர் இந்திய நாடக இயக்குனரும் மற்றும் நடிகரும் ஆவார். [1] கேரளாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர் நாடகத்தின் சிறந்த நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கேரளாவில் நாடகத்துறையின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். காளிதாச கலாகேந்திரம் என்ற புகழ்பெற்ற நாடக நிறுவனத்தை நிறுவியவர். சயனம் படத்தில் நடித்ததற்காக 2000 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

ஓ. மாதவன்
பிறப்புஓ. மாதவன்
1922
சுன்னக்கறா, திருவிதாங்கூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா ( தற்போதைய ஆலப்புழா, கேரளம், இந்தியா)
இறப்பு19 ஆகத்து 2005(2005-08-19) (அகவை 82–83)
கொல்லம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கைத்
துணை
விஜயகுமாரி
பிள்ளைகள்நடிகர் முகேஷ் உட்பட மூவர்
விருதுகள்சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது,
சயனம் (2000)

நடிகை விஜயகுமாரி இவரது மனைவியாவார். இவர்களது மகன் முகேஷ் நடிகராக உள்ளார். மேலும் இவர்களுக்கு சந்தியா மற்றும் ஜெயசிறீ என்ற இரு மகள்களும் உள்ளனர். [2]

விருதுகள் தொகு

  • 1982: கேரள சங்கீத நாடக அகாடமி விருது [3]
  • 1996: கேரள சங்கீத நாடக அகாடமி சகா [4]
  • 2000: சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது - சயனம்

மேற்கோள்கள் தொகு

  1. "അഭിനയസായാഹ്നത്തിലെ കെ.കെ".
  2. http://www.mangalam.com/cinema/interviews/246542?page=0,0 [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  4. "Kerala Sangeetha Nataka Akademi Fellowship: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஓ. மாதவன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._மாதவன்&oldid=3869454" இலிருந்து மீள்விக்கப்பட்டது