காளிதாச கலாகேந்திரம்

இந்திய நாடகத் தயாரிப்பு நிறுவனம்

காளிதாச கலாகேந்திரம் ( Kalidasa Kalakendram ) என்பது கேரளாவின் கொல்லத்தில் உள்ள பிரபல மலையாள நாடக இயக்குனரான ஓ. மாதவன் [1] அவர்களால் நிறுவப்பட்ட ஒரு தொழில்முறை நாடகக் குழுவாகும். இந்தக் குழு 25 ஜனவரி 1963 இல் பால் அறக்கட்டளையின் தாய் நிறுவனத்தின் கீழ் ஒரு சமூகமாக நிறுவப்பட்டது. [2]

வரலாறு

தொகு

கேரளாவில் உள்ள கொல்லம் நகரம் நாடகம் மற்றும் நாடக அரங்குகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். கொல்லத்தில் கடந்த காலத்தில் 450க்கும் மேற்பட்ட நாடகக் குழுக்கள் இருந்தன. ஓ. என். வி. குறுப்பு, வைக்கம் சந்திரசேகரன் நாயர் மற்றும் ஜி. தேவராஜன் ஆகியோரின் ஆதரவுடன் 25 ஜனவரி 1963 இல் ஓ. மாதவனால் நிறுவப்பட்ட காளிதாச கலாகேந்திரமும் ஒன்று. இப்போது குழுவை மாதவனின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இக்குழு கருணா[3], மெக்பத் [4], விளம்பரம்[5] உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தியுள்ளது.

திரைப்படங்கள்

தொகு

2012 ஆம் ஆண்டில், அனில் இயக்கிய ஹைட் என் சீக் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் காளிதாச கலகேந்திரம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. இப்படத்தில் ஓ.மாதவனின் பேரன் திவ்யதர்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். காளிதாச கலைகேந்திரத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு காளிதாசா இன்டர்நேஷனல் மூவிஸ் என்று பெயரிடப்பட்டது. [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Actor O. Madhavan passes away".
  2. "Kalidasa Kalakendram - Society Information". Indian NGO List.
  3. "The stage is set". Deccan Chronicle. 21 September 2017. பார்க்கப்பட்ட நாள் 21 September 2017.
  4. "Kalidasa Kalakendra invests Rs.40 lakh on Macbeth". The Hindu. 26 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
  5. "Kalidasa Kalakendra invests Rs.40 lakh on Macbeth". Malayala Sangeetham. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
  6. "'Kalidasa Kalakendram' to produce a movie". 31 May 2012. Archived from the original on 7 December 2019. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாச_கலாகேந்திரம்&oldid=3869441" இலிருந்து மீள்விக்கப்பட்டது