கக்கர்

பழங்குடியினத்தவர்

கக்கர் ( Kakar) என்பவர்கள் பஷ்தூன் பழங்குடியினர் ஆவர். இவர்கள் ஆப்கானித்தான், ஈரானின் சில பகுதிகள், பாக்கித்தானின் வடக்கு பலுச்சிசுத்தானிலும் வசிக்கின்றனர். [1]

தோற்றம்

தொகு

கக்கர்கள், பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த கர்காஷ்ட்டின் மகனான தானியின் (அல்லது டானி) வழித்தோன்றல்கள். கர்காஷ்ட், பஷ்தூன்களின் நிறுவனர் கைஸ் அப்துல் ரஷித்தின் மகன் ஆவார். அவர் ஆப்கானித்தான் மற்றும் நவீன கால பஷ்தூன்களின் முன்னோடியான ஆப்கானாவின் (அல்லது அவகானா) வம்சாவளியைச் சேர்ந்தவர்.

எறாத்தில், இவர்கள் சில சமயங்களில் காக் என்று குறிப்பிடப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாக, பழங்குடியினர் ககர் என்றும் அழைக்கப்பட்டனர், ஆனால் கக்-கோர் (காக்கின் குடும்பம்) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். எறாத்து நகரின் மத்திய ஜாமியா மசூதியின் வாயிலுக்கு முன்னால் கர்காஷ்ட்டின் கல்லறை உள்ளது. சில வரலாற்றாசிரியர்கள் இவர் முதலில் கோகித்தானில் புதைக்கப்பட்டார் என்று வாதிடுகின்றனர். ஆனால் கியாத் அல்-தின் கோரி இவரது உடலை ஹெராத் நகரில் உள்ள ஒரு மசூதியில் மீண்டும் அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்தார்.

வரலாறு

தொகு
 
1929 - ஜார்ஜ் மோர்கென்ஸ்டியர்ன் எடுத்த கக்கர் பஷ்தூன்களின் புகைப்படம்

பதினைந்தாம் நூற்றாண்டு வரை, தஜிக்குகள், பலோச் மற்றும் பார்சிவான்களுடன் கக்கர்கள் முக்கியமாக காந்தாரம் பகுதியில் வசித்து வந்தனர். மேலும் பதினான்காம் நூற்றாண்டு மற்றும் அதைச் சுற்றிலும் காந்தாரம் பகுதியில் அப்தாலி மற்றும் கில்சாய் பஷ்தூன்கள் ஆதிக்கம் செலுத்தியதால், தாஜிக்குகள், கசாராக்கள், கக்கர்கள் மற்றும் பலூச் ஆகியோர் தங்களது உடைமைகளை இழந்தனர். அப்தாலி அல்லது கில்சாய் பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்த போர்வீரர்களுக்கு போர் வரி அல்லது வருவாய் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியில், இந்த பழங்குடி மக்களில் சிலர் ஒன்றிணைந்து, மேலாதிக்க பஷ்தூன் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறினர், மற்றவர்கள் மேற்கு அல்லது வடக்கு ஆப்கானித்தானுக்கு சென்றனர். [2] [3] [4] [5]

பிரித்தானிய இந்தியாவின் பிரிவினைக்கு முன், சீன் காலாய் என அழைக்கப்படும் கக்கர் பழங்குடியினரின் இந்து உறுப்பினர்கள், தற்போது பாக்கித்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா அப்துல்லா மற்றும் கிலா சைபுல்லா, குவெட்டா, லோரலை மற்றும் மைக்டர் பகுதிகளில் வசித்து வந்தனர்.[6]

1947 க்குப் பிறகு, இவர்கள் இராசத்தான் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். [6]

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kakar Super Tribe (Pashtun)" (PDF). Archived from the original (PDF) on 23 February 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
  2. Christine Noelle. State and Tribe in Nineteenth-century Afghanistan: The Reign of Amir Dost Muhammad Khan (1826–1863). Psychology Press. p. 161.
  3. Dupree 1980: 377–378
  4. Durand 1879: 83–84
  5. Norris 1967: 295
  6. 6.0 6.1 Haider, Suhasini (3 February 2018). "Tattooed 'blue-skinned' Hindu Pashtuns look back at their roots". The Hindu (newspaper) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்கர்&oldid=3834726" இலிருந்து மீள்விக்கப்பட்டது