கசுடோ பவளப்பாம்பு

பாம்புச் சிற்றினம்
கசுடோ பவளப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாப்பிடே
பேரினம்:
கல்லியோபிசு
இனம்:
க. கசுடோ
இருசொற் பெயரீடு
கல்லியோபிசு கசுடோ
சுமித் மற்றும் பலர், 2012[2]

கல்லியோபிசு கசுடோ (Calliophis castoe), அல்லது கசுடோ பவளப்பாம்பு, எலாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு நச்சுப் பாம்பு சிற்றினம் ஆகும். இது தீபகற்ப இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.[2]

சொற்பிறப்பியல்

தொகு

க. கசுடோ உயிரியலாளர் டாட் ஏ. கசுடோவின் பெயரால் அழைக்கப்படுகிறது.[2]

புவியியல் வரம்பு

தொகு

கசுடோவின் பவளப்பாம்பு மகாராட்டிரா, கோவா மற்றும் கர்நாடகா முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மத்திய பகுதியில் பகுதி பசுமையான மற்றும் ஈரமான காடுகளில் காணப்படுகிறது.[2] ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள்தொகை கொண்ட பகுதிகளின் தாழ் நில மற்றும் மலைப்பகுதிகளாகும். பிப்சன் மற்றும் வால் போன்ற முந்தைய சேகரிப்பாளர்கள் இந்த சிற்றினத்தைப் பதிவு செய்த இடங்களில் க. நைகிரெசென்சின் மாதிரிகளைச் சேகரித்தனர். இவை இப்போது க. கசுடோ என அடையாளம் காணப்பட்டுள்ளன.[2] 1887ஆம் ஆண்டில், (அப்போதைய) பம்பாய் மாகாணத்தின் 10 நச்சுப் பாம்புகளை விவரிக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரையில், கார்வாரில் (இப்போது உத்தர கன்னடத்தில் உள்ள கார்வார்) விடாலால் சேகரிக்கப்பட்டு, பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலியோபிசு நைகிரெசென்சு என்று கருதியவற்றின் மாதிரியை பிப்சன் விவரித்தார். பிப்சன் பாம்புக்குக் கருப்பு மேல் பாகங்கள் மற்றும் ஒரே மாதிரியான சிவப்பு கீழ் பாகங்கள் இருப்பதாக விவரித்தார். இது விடால் அனுப்பிய குறிப்புகளின் அடிப்படையில் இருக்கலாம். [3] பின்னர் விடல் இதே மாதிரியை வட கன்னடாவின் நச்சுப் பாம்புகள் பற்றிய ஒரு கட்டுரையில் க. நைக்கிரன்சு என்று விவரிக்கிறார்.[4]

விளக்கம்

தொகு

முதிர்ச்சியடைந்த ஆண் பாம்பு 536–540 mm (21.1–21.3 அங்) நீளமாக இருக்கும். இப்பகுதியில் உள்ள மற்ற பவளப்பாம்புகளிலிருந்து இந்தப் பாம்பு தனித்துவமானது. ஏனெனில் இதன் பழுப்பு நிற முதுகில் ஒரு மாதிரி தோற்றம் இல்லை. மேலும் இது கிழங்கான் நிறத்துடன் வெண்மையான கீழ் உதட்டைக் கொண்டுள்ளது. கருஞ்சிவப்பு வயிற்றுத் தகடுகள் மற்றும் பக்கவாட்டு பகுயிதில் சுடர்போலக் காணப்படும்[2][5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுடோ_பவளப்பாம்பு&oldid=3642891" இலிருந்து மீள்விக்கப்பட்டது