கசுலீன் கவுர்

இந்திய வடிவழகி

கசுலீன் கவுர் (Hasleen Kaur) என்பவர் இந்திய வடிவழகி ஆவார். இவர் பாண்டலூன்சு பெமினா இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாமிடமும் மற்றும் 3 திசம்பர் 2011 அன்று புவி அழகி 2011 அழகுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும் ஆவார்.[1] 2014ஆம் ஆண்டு வெளியான கர்லே பியார் கார்லே திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகும் முன் இவர் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.

இளமை தொகு

கசுலீன் தில்லியில் வளர்ந்தவர். இவர் இயேசு மற்றும் மேரி கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். பின்னர் புது தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியலில் பட்டம் பெற்றார்.[2]

வடிவழகியாக தொகு

கசுலீன் கவுர் பல விளம்பரங்களில் வடிவழகியாக இருந்துள்ளார். இவர் ஒரு உன்னத வடிவழகியாகவும் பணியாற்றினார்.[3]

பெமினா இந்தியா அழகி தொகு

கசுலீன் கவுர் 2011 பாண்டலூன்ஸ் பெமினா இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்றார். பெமினா அழகி இந்தியா புவி அழகி 2011 பட்டத்தினை வென்றார். இதில் கனிஷ்தா தங்கர் பெமினா இந்தியா உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். பெமினா இந்தியா புவி அழகி 2010 மற்றும் புவி அழகி 2010, நிக்கோல் பரியா, நிகழ்வின் முடிவில் இவருக்கு முடிசூட்டினார்.

புவி அழகி 2011 தொகு

பிலிப்பைன்சின் மணிலாவில் திசம்பர் 3 அன்று நடைபெற்ற புவி அழகி 2011 போட்டியில் இவர் போட்டியிட்டார்.

தொழில் தொகு

கசுலீன் ஒரு ஆடை அலங்கார வடிவழகியாக உள்ளார்.

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள் மேற்கோள்
2014 கார்லே பியார் கார்லே பிரீத் இந்தி முன்னணி பாத்திரம் [4]
2022 கேட் பபிதா துணை நடிகை [5]
மிலி கசுலீன் [6]
2023 தூ ஜூதி மெயின் மக்கார் மின்னி

மேற்கோள்கள் தொகு

  1. "Hasleen Kaur Spills The Beans On Her Pageant Experience - Beauty Pageants - Indiatimes". Femina Miss India. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
  2. "Launch Pad/ Ready to rock". The Indian Express. 24 January 2014. Archived from the original on 7 January 2019. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014.
  3. "Women who posed topless". 22 January 2011 இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120115224629/http://wonderwoman.intoday.in/story1/first-bare-shoot/1/88932. 
  4. "Karle Pyar Karle to Star Miss India Earth Hasleen Kaur". 17 March 2013. http://filmystan.com/current-bollywood-news/karle-pyar-karle-to-star-miss-india-earth-hasleen-kaur/. 
  5. "EXCLUSIVE: Hasleen Kaur on her Netflix show, "After CAT, I have become an actor," breaks silence on its comparison with Udta Punjab". 11 December 2022. https://www.bollywoodhungama.com/news/bollywood/exclusive-hasleen-kaur-netflix-show-cat-become-actor-breaks-silence-comparison-udta-punjab/. 
  6. "Janhvi Kapoor's 'Mili' now streaming on Netflix". 30 December 2022. https://www.newindianexpress.com/entertainment/hindi/2022/dec/30/janhvi-kapoors-mili-now-streaming-on-netflix-2533238.html/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுலீன்_கவுர்&oldid=3706736" இலிருந்து மீள்விக்கப்பட்டது