கச்சி மாவட்டம்

பாக்கித்தானின், பலூசிஸ்தான் மாகாண மாவட்டம்

கச்சி மாவட்டம் (Kachhi or Kacchi) (பலூச்சி மற்றும் உருது: ضِلع کچّھی‎), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் மய்யத்தில் உள்ளது.[2] கச்சி மாவட்டத்தில் சிந்துவெளி நாகரித்தின் மெஹெர்கர் மற்றும் நௌசரோ தொல்லியற்களங்கள் உள்ளது. [3]

ضِلع کچّھی
மாவட்டம்
கச்சி மாவட்டம்
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கச்சி மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கச்சி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
நிறுவப்பட்டதுடிசம்பர், 1991
தலைமையிடம்தாதர்
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்2,37,030
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மாவட்ட நிர்வாகம்

தொகு

5,330 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கச்சி மாவட்டம் தாதர், மச் என இரண்டு வருவாய் வட்டங்களும், பாலனேரி, காட்டான், சானி என 3 உள் வட்டங்களையும் கொண்டது.

மேலும் இம்மாவட்டம் 13 உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டுள்ளது. அவைகள்:

 • நௌசரோ
 • மெக்ரம்
 • மச்சு
 • ஜலால் கான்
 • சான்னி
 • சந்தர்
 • கஜாய்
 • தாதர்
 • மஸ்ஸோ
 • பஸ்கியா
 • மைத்திரி

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 2,37,030 ஆகும். அதில் ஆண்கள் 1,26,379 மற்றும் பெண்கள் 1,10,651 ஆகும். கிராமப்புறங்களில் 2,02,598 மக்களும், நகரப்புறங்களில் 34,432 மக்களும் வாழ்கின்றனர். [4] இம்மாகாணாத்தில் பலூச்சி மொழி, சிந்தி மொழி மற்றும் சராய்கி மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
 1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2019-09-30.
 2. Tehsils & Unions in the District of Bolan - Government of Pakistan
 3. Hirst, K. Kris. 2005. Mehrgarh, Pakistan - Life in the Indus Valley Before Harappa. Thought Co.
 4. KACHHI DISTRICT`S SUBDIVISIONS

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சி_மாவட்டம்&oldid=3594158" இலிருந்து மீள்விக்கப்பட்டது