கஞ்சஞ்சங்கா மலை

பூமியில் 3வது மிக உயரமான மலை, நேபாளம் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ளது
(கஞ்சன்சங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கஞ்சஞ்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā) உலகிலுள்ள மூன்றாவது உயரமான மலையாகும். இமயமலைத்தொடரில் மேற்கில் தமோர் ஆற்றையும் வடக்கில் லோனக் ஆற்றையும் ஜொங்ஸொங் மலையுச்சியையும் கிழக்கில் டீஸ்டா ஆற்றையும் எல்லைகளாகக்[3] கொண்டு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ள இதன் மலையுச்சி கடல் மட்டத்திலிருந்து 8,586 மீட்டரில் உள்ளது. இது நேபாளத்தின் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.[4]

கஞ்சஞ்சங்கா
Kanchenjunga
கஞ்சஞ்சங்கா மலை
உயர்ந்த புள்ளி
உயரம்8,586 m (28,169 அடி)[1]
3-ஆவது உயரமான மலை
புடைப்பு3,922 m (12,867 அடி)[2]
29-ஆவது
பட்டியல்கள்
ஆள்கூறு27°42′0.00″N 88°7′59.99″E / 27.7000000°N 88.1333306°E / 27.7000000; 88.1333306[2]
புவியியல்
கஞ்சஞ்சங்கா Kanchenjunga is located in இந்தியா
கஞ்சஞ்சங்கா Kanchenjunga
கஞ்சஞ்சங்கா
Kanchenjunga
இந்திய நேபாள எல்லையில் அமைவிடம்
அமைவிடம்நேபாளம்-இந்தியா எல்லை[2]
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்25 மே 1955
ஏறியவர் சோ பிரௌன்-உம் சியார்ச்சு பாண்டு
(குளிர்கால முதல் மலையேற்றம்- சனவரி 11, 1986, செர்சி குக்குசுக்காவும் கிறிசிச்சாஃபு வீலிக்கி)
எளிய வழிபனியாறு/தூவிப்பனி//உறைபனியேற்றம்

கஞ்சன் ஜங்கா என்பது வட்டார வழக்கில் உயர் பனியின் ஐந்து புதையல்கள் என்று பொருள்படும்.[5] கஞ்சஞ்சங்காவில் மொத்தம் ஐந்து கொடுமுடிகள் (சிகரங்கள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.

1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Carter, H. A. (1985). "Classification of the Himalaya". American Alpine Journal 27 (59): 109–141. http://c498469.r69.cf2.rackcdn.com/1985/109_carter_himalaya_aaj1985.pdf. 
  2. 2.0 2.1 2.2 Jurgalski, E.; de Ferranti, J.; Maizlish, A. (2000–2005). "High Asia II – Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org.
  3. Freshfield, D. W. (1903). Round Kangchenjunga: a narrative of mountain travel and exploration. London: Edward Arnold.
  4. Kanchenjunga
  5. De Schlagintweit, H.; de Schlagintweit, A.; de Schlagintweit, R. (1863). "IV. Names explained". Results of a Scientific Mission to India and High Asia, undertaken between the years MDCCCLIV and MDCCCLVIII by order of the court of Directors of the Honourable East India Company. Volume III. London: Brockhaus, Leipzig and Trübner & Co. p. 207.
  6. Gillman, P. (1993). Everest: The Best Writing and Pictures from Seventy Years of Human Endeavour. Boston: Little, Brown and Company. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0316904896.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சஞ்சங்கா_மலை&oldid=3777013" இலிருந்து மீள்விக்கப்பட்டது