கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காத்ர சுந்தரேசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் (முன்னர் நாகப்பட்டினம் மாவட்டம்) கஞ்சாநகரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் 'கார்த்திகா சுந்தரேசுவரர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.[1] அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் பிறந்து முக்தி அடைந்த திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது.[2]

கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
காத்ர சுந்தரேசுவரர் கோயில், கஞ்சாநகரம், மயிலாடுதுறை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°06′57″N 79°42′26″E / 11.115856°N 79.707249°E / 11.115856; 79.707249
பெயர்
வேறு பெயர்(கள்):கார்த்திகா சுந்தரேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவிடம்:கஞ்சாநகரம்
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:23.13 m (76 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காத்ர சுந்தரேசுவரர்
தாயார்:துங்கபாலஸ்தானாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.13 மீட்டர்கள் (75.9 அடி) உயரத்தில், (11°06′57″N 79°42′26″E / 11.115856°N 79.707249°E / 11.115856; 79.707249) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

 
 
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில் (தமிழ் நாடு)

முக்கியத்துவம்

தொகு

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களது தோசம் நீங்க இக்கோயிலில் வழிபட்டு பரிகாரம் செய்து கொள்ளும் தலமாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.[3]

இதர தெய்வங்கள்

தொகு

துர்க்கை, சண்டிகேசுவரர், பிரம்மா, மேதா தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், செல்வ விநாயகர், சுப்பிரமணியர், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலின் மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "கஞ்சாநகரம் கார்த்திகா சுந்தரேஸ்வரர்". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
  2. ValaiTamil. "Temples and other spritual places are organized in valaitamil.com". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
  3. "கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
  4. "Kathra Sundareswarar Temple : Kathra Sundareswarar Kathra Sundareswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.