கடல் ஆடு
கடல் ஆடு (Sea goat) என்பது புராணகால நீர்வாழ் விலங்கு ஆகும். இது பாதி ஆடு மற்றும் பாதி மீன் என்று விவரிக்கப்படுகிறது.[2]
குழு | பழம்பெரும் உயிரினம் |
---|---|
உப குழு | கலவை |
மூலம் | பிரிகசு, குரோனசு |
தொன்மவியல் | கிரேக்க தொன்மவியல், யூத நாட்டுப்புறம், சுமேரிய மதம் |
First reported | தெரியவில்லை |
பிரதேசம் | மெசோபொடாமியா, கிரிஸ், இசுரேல் |
வாழ்விடம் | கடல் |
மகர ராசியானது பொதுவாகக் கடல் ஆடுகளின் வகையாகக் கற்பனை செய்யப்பட்டது. மெசபடோமியாவின் வெண்கலக் காலத்திலிருந்து இது குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. பின்னர் பாபிலோனியர்கள் 'ஆடு மீன்' என்பதை, என்கி கடவுளைக் குறிக்கின்றனர்.[3]
கிரேக்க விளக்கம்
தொகுகடல் ஆட்டின் கிரேக்க விளக்கம் பாபிலோனிய ராசியின் அறிமுகத்திலிருந்து வருகிறது. கிரேக்க பாந்தியனுக்குள் மகர விண்மீன் தொகுப்பைக் குறியிடும் முயற்சியில், இரண்டு கட்டுக்கதைகள் பயன்படுத்தப்பட்டன. சியுசு வளர்த்த ஆடு அமல்தியா என்பது ஒன்று. ஒரு குழந்தையாக அவரை கவனித்துக்கொண்டதற்கு நன்றி செலுத்தும் விதமாக, சியுசு இவரை நட்சத்திரங்களுக்குள் ஒன்றாக வைக்கிறார்.[4] மற்றொன்று கடல் ஆடு பான் வனக் கடவுள். அசுரன் தைபோனிலிருந்து தப்பிக்க சியுசு ஆற்றில் குதித்ததாகப் புராணம் கூறுகிறது. இவர் ஆற்றில் குதிக்கும் போது தன்னை ஒரு மீனாக மாற்ற முயல்கிறார். ஆனால் இவர் மிக விரைவாக நீரினுள் சென்றார். எனவே இவரது கீழ் பாதி மட்டுமே மீனாக மாறுகிறது. சியுசு பின்னர் அசுரனுடன் போரில் ஈடுபடுகிறார். சியுசு அசுரனைத் தோற்கடித்தார். ஆனால் தைபோன் சியுசு கால்களிலிருந்த தசைகளைச் சேதப்படுத்தினார். எர்மெசு உதவியுடன், பான் சேதமடைந்த தசைகளை மாற்றுகிறது. இவரைக் குணப்படுத்தியதற்கான வெகுமதியாக, சியுசு பானை வானத்தில் மகரமாக வைத்தார்.[5] ஏகிபன் கடவுளும் கிரேக்கக் கலையில் கடல் ஆடாகச் சித்தரிக்கப்படுகிறார்.
யூத பாரம்பரியம்
தொகுயூத வாய்மொழி வரலாற்றில், கடல் ஆடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு நாள் கடலின் அனைத்து உயிரினங்களும் லெவியாதன் என்ற அசுரனிடம் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று செல்கிறது. மற்றொன்றில், ஒரு கடலர் கடலில் தொலைவில் இருக்கும்போது ஒரு கடல் ஆட்டை எதிர்கொண்டார். ஆட்டின் கொம்புகளில் வாக்கியம் செதுக்கப்பட்டிருந்தது, "நான் ஒரு சிறிய கடல்-விலங்கு, ஆனால் நான் லீவியாதனுக்கு உணவளிக்க முந்நூறு பராசங்கங்களைக் கடந்து சென்றேன்."[6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tamsyn Barton (1995). "Augustus and Capricorn: Astrological Polyvalency and Imperial Rhetoric". The Journal of Roman Studies (Society for the Promotion of Roman Studies) 85: 47.
- ↑ "The Capricorn goat/sea goat". Gods and Monsters.
- ↑ Rogers, John H. (1998). "Origins of the ancient constellations: I. The Mesopotamian traditions". Journal of the British Astronomical Association 108: 9–28. Bibcode: 1998JBAA..108....9R.
- ↑ Hatziminaoglou, Y.; Boyazoglu, J. (February 2004). "The goat in ancient civilisations: from the Fertile Crescent to the Aegean Sea". Small Ruminant Research 51 (2): 123–129. doi:10.1016/j.smallrumres.2003.08.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-4488. http://dx.doi.org/10.1016/j.smallrumres.2003.08.006.
- ↑ Brown, Douglas (March 1999). "Legends of the Earth, Sea, and Sky: An Encyclopedia of Nature Myths99142Tamra Andrews. Legends of the Earth, Sea, and Sky: An Encyclopedia of Nature Myths. Santa Barbara and Oxford: ABC‐Clio 1998. xiii + 322 pp, ISBN: 0 87436 963 0 £39.95". Reference Reviews 13 (3): 19. doi:10.1108/rr.1999.13.3.19.142. பன்னாட்டுத் தர தொடர் எண்:0950-4125. http://dx.doi.org/10.1108/rr.1999.13.3.19.142.
- ↑ Louis Ginzberg. (1909) Legends of the Jews.