கடியலூர்
கடிகை என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்று பள்ளி.
சோளிங்கநல்லூரில் நரசிம்மப் பெருமாள் இருக்கும் மலைக்குக் கடிகாசலம் என்னும் பெயர் உண்டு. உருத்திராச்சக் கொட்டையைக் கடிகை, கடுக்கை என்றெல்லாம் வழங்குவர். இம்மலையில் உருத்திராச்ச மரங்கள் இருந்தன போலும்.
கெடில ஆறு பாயும் கடலூரில் பாடலீசுரர் கோயில் உள்ளது.
கங்கைக்கரைப் பாடலிபுத்திரம் நந்த அரச வழியினரின் தலைநகர்.
கெடில ஆற்றின் வடகரையில் கடலூர். தென்கரையில் பாடலி.
இங்கு வடமொழிப் பல்கலைக் கழகம் ஒன்று பண்டைக் காலத்தில் இருந்தது. இங்கிருந்த பல்கலைக் கழகம் கடிகை எனப்பட்டது. இந்தக் கடிகை இருந்த ஊர் கடியலூர். அறியாமையைப் போக்கிய காரணத்தால் இவ்வூர் கடியலூர் எனப்பட்டது எனலும் ஒன்று. கடிகை மரம் இருந்த ஊர் எனலும் மற்றொரு பார்வை.
இந்தக் கடியலூரில் வாழ்ந்த சங்க காலப் புலவர்களில் ஒருவர் பொருநராற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்.