கட்சர் ஏரி
கட்சர் ஏரி (Gadsar Lake) , பூக்களின் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் கந்தர்பால் மாவட்டத்தில் [1] 3,600 மீட்டர் (11,800 அடி) உயரத்தில் பனி சூழ அமைந்துள்ள ஒப்பீட்டளவில் தாவர ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள ஏரியாகும். இதன் அதிகபட்ச நீளம் 0.85 கிமீ மற்றும் அதிகபட்ச அகலம் 0.76 கிமீ. ஆகும்.
கட்சர் ஏரி | |
---|---|
மீன்களின் ஏரி | |
கட்சர் ஏரி | |
அமைவிடம் | காந்தர்பல் மாவட்டம், ஜம்மு காஷ்மீர் |
ஆள்கூறுகள் | 34°25′18″N 75°03′26″E / 34.421669°N 75.057274°E |
வகை | தாவர ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள ஏரி |
முதன்மை வரத்து | பனி உருகுவதால் உருவாகிறது |
முதன்மை வெளியேற்றம் | நீலம் ஆற்ரின் கிளை ஆறு |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 0.85 கிலோமீட்டர்கள் (0.53 mi) |
அதிகபட்ச அகலம் | 0.76 கிலோமீட்டர்கள் (0.47 mi) |
மேற்பரப்பளவு | 0.7421 km2 (0.2865 sq mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 3,600 மீட்டர்கள் (11,800 அடி) |
உறைவு | திசம்பர் முதல் ஏப்ரல் வரை |
சொற்பிறப்பியல், புவியியல்
தொகுகாஷ்மீரி மொழியில் கட்சர் என்பது "மீன்களின் ஏரி" எனப்பொருளாகும். இது பழுப்பு திரௌட் உட்பட பிற வகை மீன்களின் இயற்கையான வாழ்விடமாக இருக்கிறாது.[2] நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் இந்த ஏரி உறைந்துவிடும். இந்த மாதங்களில் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். கோடையில் கூட மிதக்கும் பனிப்பாறைகள் காணப்படுகின்றன. இது பல்வேறு வகையான காட்டு அல்பைன் மலர்கள் நிறைந்த அல்பைன் புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த ஏரி பூக்களின் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி முக்கியமாக பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவாகிறது. கட்சர் ஏரி ஒரு ஓடை வழியாக வடமேற்கு நோக்கி பாய்ந்து துலைலில் நீலம் ஆற்றில் இணைகிறது.
அணுகல்
தொகுசிறிநகர் நகரத்திலிருந்து வடகிழக்கே 108 கிலோமீட்டர் தொலைவில் ஏரி அமைந்துள்ளது. நாரநாக்கில் இருந்து 28 கிமீ ஆல்பைன் பாதை ஏரிக்கு செல்கிறது. சிட்காடி சோன்மார்க்கிலிருந்து வடமேற்கே 41 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு பாதையானது விசன்சர் ஏரி மற்றும் கிருஷண்சர் ஏரி வழியாக கடல் மட்டத்திலிருந்து 4100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள நிச்னாய் மற்றும் கட்சர் ஆகிய இரண்டு மலைப் பாதைகளைக் கடந்து கட்சர் ஏரிக்குச் செல்கிறது. [3] சூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலம் ஏரியை பார்வையிட சிறந்த நேரம்.
கட்சர், மரண ஏரி
தொகுகட்சர் ஏரி யெம்சர் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது யமனின் ஏரி அதாவது "மரண ஏரி" என்றும் குறிப்பிடப்படுகிறது. [4] இன்னும் தீர்க்கப்படாத கட்டுக்கதை. கோடைக்காலத்தில் கட்சர் ஏரியின் அருகே தங்கள் மந்தைகளை மேய்க்கும் இடையர்கள், ஏரி மான்ஸ்டர், ஒரு நன்னீர் ஆக்டோபஸ் வாழ்கிறது என்று நம்புகிறார்கள். இது கரையிலிருந்து உயிரினங்களை அதன் கைகள் மூலம் தண்ணீருக்குள் இழுக்கிறது. பார்வையாளர்களின் மனதில் ஒரு நிச்சயமற்ற தன்மை உள்ளது. இது ஒரு வகையான அச்சுறுத்தல் அவர்களை கரைக்கு அருகில் செல்வதைத் தடுக்கிறது. இடையர்களும் தங்கள் மந்தைகளை ஏரியின் கரையில் மேய்ப்பதையேத் தேர்ந்தெடுகின்றனர். ஏரிக்கு வெளியே ஓடும் ஓடையில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ "Gangabal in Ganderbal". kashmirparadise.com. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
- ↑ "Fishes and Fisheries in high altitude lakes, Vishansar, Gadsar, Gangabal, Krishansar". Fao.org. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
- ↑ "Go to Kashmir". go2kashmir.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
- ↑ Excelsior, Daily (2012-08-17). "Sacred Shrines of Haramukh" (in en-US). https://www.dailyexcelsior.com/sacred-shrines-of-haramukh/.