கடமத்
(கட்மத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடமத் தீவு (மலையாளம்: കടമത്ത്), இந்திய ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது அமினிதிவி தீவுக்கூட்டத்தில் உள்ள தீவு.[1]
இந்த ஊரில் மக்கள் வாழ்கின்றனர்.[2] இந்த தீவின் வடமேற்கில் 67 கி.மீ தொலைவில் கவரத்தி உள்ளது. இந்த தீவுக்கு வெகு அருகில் அமினி தீவு உள்ளது. இங்கிருந்து கேரள நகரமான கொச்சி 407 கி.மீ தொலைவில் உள்ளது.[3] அகத்தி தீவில் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[2]
சுற்றுலா
தொகுஇந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு இசுகூபா மூழ்கல் வசதி உண்டு. இங்கு 50 பேர் தங்கும் வசதி கொண்ட விடுதியும் உண்டு.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Critical Habitat Information System of Kadmat Island" (PDF). இந்திய அரசு, Department of Ocean Development. Archived from the original (PDF) on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
- ↑ 2.0 2.1 2.2 "Lakshadweep: All quiet on India's secret islands". The Independent. 9 August 2015.
- ↑ "Kadmat - At a Glance". National Informatics Center.