அகத்தி தீவு

அகத்தி தீவு (Agathy Island), (மலையாளம்: അകറ്റി ഐല്യാംഡ്), அகட்டி (Agatti) என்றும்கூட அழைக்கப்படும் இத்தீவு, தெற்காசிய துணைக்கண்டத்தின் இந்திய தென்மேற்கு கடற்பகுதியின் ஒன்றிய பிராந்தியமான இலட்சத்தீவில், 36 தீவுத்திட்டுகளில் ஒன்றாகும். பவளத்தீவாக அறியப்படும் இது 5.6 கிலோமீட்டர் (3.47968 மைல்கள்) நெடியத்தீவாக அமைந்துள்ளது.[2]

அகத்தி தீவு
Agathy Island
அகத்தி தீவு, இலட்சத்தீவுகள்.
புவியியல்
பரப்பளவு2.7 km2 (1.0 sq mi)[1]
உயர்ந்த ஏற்றம்2 m (7 ft)
நிர்வாகம்
இந்தியா
மக்கள்
மக்கள்தொகை5667 (2001)


இலட்சத்தீவுகளின் பவழத்தீவுகள் காண்பிக்கப்படும் செயற்கைக்கோள் படம்

நிலவியல் தொகு

அகத்தி தீவின் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெருந்திட்டு பகுதியான பங்காரம் (Bangaram) எனும் தென்மேற்கு நிலபரப்பு, இந்திய தென்கடை மாகாணமான கேரளாவின் கொச்சி என்ற பெருநகரதிலிருந்து சுமார் 459 கிலோமீட்டர் (285 மைல்கள்) இடைதூரத்தில் அமைந்துள்ளது.[3] மேலும் அகத்தி நிலத்திட்டு கேரளா மாநில மற்றொரு நகரமான கொல்லத்திலிருந்து 533 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அதேநகர துறைமுகத்திலிருந்து 529 கிலோமீட்டர்கள் தூரத்திலும் உள்ளது.[4] அகத்திக்கு நெருங்கிய (54 கிமீ) குடியேற்ற தீவான கவரட்டியிலிருந்து (Kavaratti), தெற்கே 76 கிலோமீட்டர் தொலைவில் சுஹெளி பர் (Suheli Par) எனும் தீவு திட்டுள்ளது.[5] அகத்தியின் மொத்த நிலபரப்பு தோராயமாக 2.7 சதுர கிலோமீட்டர் (1 சதுர மைல்) ஆகவும், அதே தீவுதிட்டின் தென் கடைகோடியில் கல்பட்டி என்கிற ஒரு சிறுத்தீவு இருப்பதாகவும் மூலாதாரம் உள்ளது.[6][7]

சனத்தொகை தொகு

2011-ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 3.84-ன் விகிதத்தில் (3889 ஆண்கள்), (3671 பெண்கள்) அகத்தித்தீவின் சனத்தொகை 7.560-ஆக இருந்தது இதில் இசுலாமிய சமயம் பெரும்பான்மையாக காணப்பட்டது.[8] இசுலாமிய சமயத்தை இலட்சத்தீவுகள் பகுதிக்கு அரேபிய பயணியான இப்னு பதூதா (Ibn Batuta) என்பவர் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.[9] அகத்தி தீவு குடியானவர்கள், தமது சொந்த தேவைக்காக எரிபொருள் பயன்படுத்தி 1௦௦ கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக மாற்றும் அலகுமூலம் பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.[10]

மார்க்கங்கள் தொகு

கடல் மார்க்கம் தொகு

இலட்சத்தீவுகள், கடல் மார்க்கமாக கொச்சி இணைக்கப்பட்டுள்ளது. ஏழு பயணிகள் கப்பல்கள் இரு துறைமுகங்களுக்கிடையே இயக்கப்படுகின்றது, மற்றும் இந்த பயணப்பாதையை கடக்க 14-2௦ பயணநேரமாக எடுத்துகொள்ளப்படுகிறது. மேலும் இம்மார்க்க கப்பல்கள் குளிரூட்டப்பட்ட நவீனத்துவமும், உணவுவிடுதிகள் வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக காணபடுகின்றது.[11]

வான்மார்க்கம் தொகு

 
அகத்தி வானூர்தித் தளம்

இலட்சத்தீவுகள் பகுதியில், அகத்தி வானூர்தித் தளம் பிரதான வானூர்தி தளமாக அறியப்படுகிறது. எயர் இந்தியா பிராந்திய (Air India Regional) வானூர்தி நிறுவனம், ஏடிஆர் 42 (ATR 42) வகை வானூர்திகளை கேரள மாநில கொச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் இயக்கப்படுகிறது.[12] கொச்சியிலிருந்து வானூர்திப் பயண நேரம் 9௦ நிமிடங்கள். மேலும் கொச்சி வானூர்தி தளம், உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு வானூர்தி சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.[11]

சுற்றுலா தொகு

இலட்சத்தீவுகள் பெருந்திட்டு தொகுப்பின் சுற்றுலா தளங்களில் அகத்தி தீவும் ஒன்றாகும். பார்வையாளர்கள், எனினும் சில நிபந்தனையின் கீழ் தீவுக்குள் அனுமதிக்கபடுகிறது.[13] சுற்றுலா பயணிகளானாலும், தீவுகளின் குடியானவர்களின் உறவுக்கார்களானாலும், இலட்சத்தீவுகள் நிர்வாகத்திடம் நுழைவு அனுமதி பெறவேண்டும்.[14] பார்வையாளர்கள் நுழையவும், மற்றும் உறுதியாக ஒரு இடத்தில் தங்கவும் அனுமதி (Permit) அளிக்கப்படுகிறது. அகத்தி தீவில், "அகத்தி கடற்கரை ஓய்வுவிடுதி" (Agatti Island Beach Resort(AIBER) மற்றும் "கடற்சிப்பிகள் கடற்கரை ஒய்வுவிடுதி" (Sea Shells Beach Resort) என இரண்டு ஓய்வுவிடுதிகள் உள்ளன.[15] அகத்தி தீவு முழுவதும் சாலைகள் நிறுவியுள்ளது, ஒரு மிதிவண்டி மூலம் தீவின் எப்பகுதிக்கும் சென்று அனுபவிக்க ஏதுவானதாக அமைக்கப்பட்டள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. "Islandwise Area and Population - 2001 Census" (PDF). Government of Lakshadweep. Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  2. "Agatti - Gateway to Lakshadweep|வலை காணல்: சனவரி ௦1 2016". Archived from the original on 2016-01-01. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  3. "POPULAR DESTINATIONS|வலை காணல்: சனவரி-02-2016". Archived from the original on 2016-01-13. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  4. DISTANCE BETWEEN KOLLAM TO AGATTI ISLAND|Distance from Kollam to Agatti Island is 533 km.|வலை காணல்: சனவரி-02-2016
  5. Suheli Par, Laccadives, India - List of All Places|வலை காணல்: சனவரி-02-2016[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Agatti|Landsat 7 Path 147, Row 052 05 March 2000|வலை காணல்: சனவரி-02-2016
  7. "Oceandots - Agatti". Archived from the original on 2010-12-23. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.
  8. CENSUS OF INDIA – 2011 LAKSHADWEEP PROVISIONAL POPULATION DATA SHEET BASIC FIGURES AT A GLANCE|data sheet.pdf 1/3-3/3|வலை காணல்: சனவரி-03-2016
  9. About Agatti Island|வலை காணல்: சனவரி-05-2016
  10. World Public Library|AGATTI|வலை காணல்: சனவரி-05-2016
  11. 11.0 11.1 "Means of Transport|Official Website of Union Territory of Lakshwadeep|வலை காணல்: சனவரி 05 2016". Archived from the original on 2014-12-31. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.
  12. Airline Allied Services Limited|வலை காணல்: சனவரி 05 2016
  13. "LAKSHADWEEP CRUISES|வலை காணல்: சனவரி 06 2016". Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
  14. "lakshadweep Police Department|வலை காணல்: சனவரி 06 2016". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
  15. "Agatti Island Beach Resort|வலை காணல்: சனவரி 06 2016". Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agatti
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தி_தீவு&oldid=3704119" இலிருந்து மீள்விக்கப்பட்டது