கணபதிபாளையம்
கணபதிபாளையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டதில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.
கணபதிபாளையம் | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுஇச்சிற்றூர், காட்டுப்புத்தூரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு மொத்தம் 130 குடும்பங்கள் வசிக்கின்றன். இம்மக்களின் ஒரே தொழில் விவசாயம். இவ்வூர் தனது அனைத்து தேவைகளுக்கும் காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கிறது.
விவசாயம்
தொகுஇங்குள்ள அனைவரும் சிறு விவசாயிகள் ஆவர். அனைவரும் கிணற்றுடன் கூடிய மூன்று போகமும் விளையக்கூடிய விளைநிலங்களை வைத்துள்ளனர். இது ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி உள்ள பகுதியாகும்.
வாழை, கரும்பு, நெல், மரவள்ளிக்கிழங்கு, கடலை மற்றும் காய்கறிகள் வருடந்தோறும் பயிரிடப்படுகின்றன.
கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு, அனைத்து விவசாயிகளும் தமிழக அரசின் இலவச மின்சார வசதி பெற்றுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
தொகுஇவ்வூர் மக்களின் வாழ்க்கை உயர்வுக்கு இக்கூட்டுறவு நிறுவனம் மிகுந்த உறுதுணையாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இங்குள்ள மக்கள் உற்பத்தி செய்யும் பாலை காலையும் மாலையும் சேகரித்து, தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்புவதே இந்நிலையத்தின் பணியாகும். பின், அவற்றிக்கான தொகையை 14 நாட்களுக்கொரு முறை பட்டுவாடா செய்கிறது. பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்கிறது.
இவ்வூர் மக்களின் தினசரி சில்லரை செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்விச்செலவுகளுக்கும் இத்தொகையே பெரிதும் பயன்படுகிறது.
கல்வி வசதிகள்
தொகுஇவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்குகிறது. மேற்படிப்புக்கு காட்டுப்புத்தூரில் உள்ள ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2 வருடமாக குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர் (கிட்டத்தட்ட 15 குழந்தைகள் தற்போது ஆங்கில வழி கல்வியில் படித்து வருகின்றனர்.)
போக்குவரத்து வசதி
தொகுகாட்டுப்புத்தூரிலிருந்து மோகனூர் வரை, இவ்வூர் வழியாக மணிக்கொருமுறை சிற்றுந்து (மினிபஸ்) இயக்கப்படுகிறது. காட்டுப்புத்தூரிலிருந்து, சுற்றியுள்ள அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் உள்ளன.
aafdasf
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.