கணினி வரைகலை
கணினி வரைகலை (Computer graphics) என்பது கணினியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை வடிவங்கள் ஆகும். முன்னை நாட்களில் காகிதம், துணி, போன்றன வரைகலையை ஆக்கும் பரப்புக்களாக பயன்பட்டன. இன்று கணினித்திரையில் கணினியினால் உருவாக்கப்படும் வண்ணங்களையும் உபகரணங்களையும் கொண்டு வரைகலைகள் ஆக்கப்படுகின்றன.
கணினி மூலம் வரைகலைகளை ஆக்குவதாலான நன்மைகள்தொகு
வரைகலையை விரைவாக ஆக்க முடிவதுடன் அழிவடையாமல் சேமிக்கவும் இணையத்தினூடாக பரிமாற்றம் செய்யவும் முடிகின்றது.