கணேச வம்சம்
கணேச வம்சம் (Ganesha dynasty), கிபி 1414-இல் இராஜா கணேசன் வங்காளத்தில் நிறுவினார். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக கௌட நகரம் இருந்தது. இம்வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை கிபி 1414 முதல் 1435 முடிய 21 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவிய முதல் மன்னர் இராஜா கணேசன், இந்து சமயத்தினராக இருப்பினும், இவரது வழித்தோன்றல்கள் இசுலாமியத்திற்கு மாறி வங்காள சுல்தானகத்தை ஆண்டனர்.
கணேச வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1416–1436 | |||||||||
தலைநகரம் | பண்டைய கௌட நகரம் ( பெரும் பகுதி தற்கால மேற்கு வங்காளத்தின், மால்டா மாவட்டம் மற்றும் சிறு பகுதி வங்காள தேசத்தின் சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம்) | ||||||||
சமயம் | இந்து சமயம் பின்னர் இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
• 1414–1415 & 1416–1418 (இரண்டாம் முறை) | மன்னர் இராஜா கணேசன் | ||||||||
• 1415–1416 & 1418–1433 | ஜலாலுத்தீன் முகமது ஷா | ||||||||
• 1433–1435 | சம்சுதீன் அகமது ஷா | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1416 | ||||||||
• முடிவு | 1436 | ||||||||
|
வரலாறு
தொகுவங்காள சுல்தானகத்தில் குழப்பமான சூழ்நிலை எழுந்த நேரத்தில், இராஜா கணேசன் என்பவர், இசுலாமிய சூபி ஞானி குதுப் அல் ஆலாம் என்வரின் ஆசியுடன், கிபி 1414-இல் இலியாஸ் சாகி வம்சத்தின் வங்காள சுல்தான் முதலாம் அலாவுதீன் பிரூஸ் ஷாவை கொன்று, கணேச வம்சத்தை நிறுவினார். இராஜா கணேசன் தனது மகன் ஜாதுவை, 1415-இல் இசுலாமிய சமயத்திற்கு மாற்றி ஜலாலுத்தீன் முகமது ஷா என பெயர் மாற்றம் செய்வித்து, ஆட்சியை அவனிடம் வழங்கினார்.[1] 1435-இல் கணேசன் வம்சத்தின் மன்னர் சம்சுதீன் அகமது ஷாவை வென்று மீண்டும் இலியாஸ் சாகி வம்சத்தினர் ஆட்சியை நிறுவினர்.
கணேசன் வம்ச ஆட்சியாளர்கள் (1414-1435)
தொகுபெயர் | ஆட்சிக் காலம் | குறிப்புகள் |
---|---|---|
இராஜா கணேசன் | 1414–1415 | |
ஜலாலுத்தீன் முகமது ஷா | 1415–1416 | இராஜா கணேசனின் மகன், பின்னர் இசுலாமை தழுவினார் |
இராஜா கணேசன் | 1416–1418 | இரண்டாம் முறை |
ஜலாலுத்தீன் முகமது ஷா | 1418–1433 | இரண்டாம் முறை |
சம்சுத்தீன் அகமது ஷா | 1433–1435 |
-
கணேச வம்சத்தின் முதல மன்னர் இராஜா கணேசன்
-
கணேச வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஜலாலுதீன் முகமதின் நினைவிடம், கௌட நகரம், மேற்கு வங்காளம்
-
கணேச வம்சத்தின் மூன்றாம் மன்னர் சம்சுதீன் அகமது ஷாவின் பாழடைந்த அரண்மனை, தினஜ்பூர்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Biographical encyclopedia of Sufis By N. Hanif, pg.320