கண்டங்கத்தரி

ஒரு மூலிகை
கண்டங்கத்தரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
வகுப்பு:
வரிசை:
சோலனேசி
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. xanthocarpum
இருசொற் பெயரீடு
Solanum xanthocarpum
வேறு பெயர்கள்

Solanum surattense [1]

கண்டங்கத்தரி மலர்

கண்டங்கத்தரி (ஒலிப்பு) என்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்குப் பல கிளைகள் உண்டு. அக்கிளைகளில் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1.3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும். காயானது கத்தரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்.

பெயர்கள்

தொகு

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு.[2]

  1. 'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி).[3]
  2. 'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்[4]

மூலிகைகளில் பங்கு

தொகு

மூலிகை வகைகளில் கண்டங்கத்தரி ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தச மூலம் என்பது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இது தயாரிக்கப் படுவதால் தச மூலம் எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. KANTAKARI (Solanum xanthocarpum) பரணிடப்பட்டது 2013-09-23 at the வந்தவழி இயந்திரம், herbalcureindia.com
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (22 திசம்பர் 2018). "நோய்களைக் கொய்யும் 'கத்திரி!'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2018.
  3. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=103
  4. http://www.vikatan.com/doctorvikatan/Alternate-Medicine/23937-kandakathiri.html#cmt241 கண்கண்ட மூலிகை கண்டங்கத்தரி! விகடன்

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Solanum virginianum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டங்கத்தரி&oldid=3882683" இலிருந்து மீள்விக்கப்பட்டது