கண்டசாலா, கிருஷ்ணா மாவட்டம்
கண்டசாலா (Ghantasala), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின், கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்த ஊராகும்.
கண்டசாலா
தங்கசாலா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 16°10′9.62184″N 80°56′39.3835199880193″E / 16.1693394000°N 80.944273199996672474°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிருஷ்ணா |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.21 km2 (4.71 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 9,248 |
• அடர்த்தி | 760/km2 (2,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 521 133 |
தொலைபேசி குறியீடு எண் | 08671 |
வாகனப் பதிவு | AP 16 |
அருகமைந்த நகரங்கள் | மச்சிலிப்பட்டணம், குடிவாடா |
பாலின விகிதம் | 10:9.8 ♂/♀ |
எழுத்தறிவு | 60% |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி | மச்சிலிப்பட்டணம் |
சட்டமன்றத் தொகுதி | அவனிகட்டா |
பௌத்த சமய தூபிகள் மற்றும் சிற்பங்கள் நிறைந்த கண்டசாலா கிராமம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து மேற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், கிருஷ்ணா ஆற்றிலிருந்து கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவிலும், விஜயவாடா நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுபிரித்தானிய இந்தியாவின் அதிகாரியான போஸ்வெல் என்பவர் கண்டசாலா ஊரை, பௌத்த சமய வரலாற்றுத் தொல்லியல் களமாக 1870 – 1871ல் அறிவித்தார். அலெக்சாண்டர் ரியா எனும் பிரித்தானிய தொல்லியல் அகழ்வாராய்ச்ச்சியாளர் 1919 – 1920களில் கண்டசாலாவில் அகழ்வாராய்ச்சி செய்த போது, கி பி 2 – 3-ஆம் நூற்றாண்டு காலத்திய 112 சுற்றளவும், 23 அடி உயரமும் கொண்ட பௌத்த தூபியும், சிதிலமடைந்த பௌத்த விகாரைகளும், சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது.[2][3]
பொருளாதாரம்
தொகுகண்டசாலா ஊரின் முதன்மைப் பொருளாதாரம் கைத்தறி நெசவு ஆகும். இங்கு நெய்யப்படும் பருத்தி சேலைகள் இந்தியாவின் பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.[4]
கோயில்
தொகுகண்டசாலா கிராமத்தில் ஜலதீஷ்வரர் கோயில் அமைந்துள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "District Census Handbook - Krishna" (PDF). Census of India. p. 16,448. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ South Indian Buddhist Antiquities, A. Rea, 1989, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0512-8
- ↑ Historical Discoveries in Krishna District of Andhra Pradesh of India[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Appala Naidu, T (3 April 2013). "Ghantasala weavers now playing major role in weaving exquisite sarees". The Hindu (Ghantasala (Krishna District)). http://www.thehindu.com/news/national/andhra-pradesh/ghantasala-weavers-now-playing-major-role-in-weaving-exquisite-sarees/article4576727.ece. பார்த்த நாள்: 17 November 2015.
- ↑ Ghantasala Jaladheeswara Swamy