கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளை

கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளை (Kandathil Varghese Mappillai) (1857 – 1904 சூலை 6 [1] ) இவர் ஓர் இந்தியப் பத்திரிகையாளரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் வெளியீட்டாளரும் ஆவார். இவர் மலையாள மனோரமா செய்தித்தாள் மற்றும் பாசாபோசினி என்றப் பத்திரிகையின் நிறுவனரும் ஆவார்.

கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளை

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

வர்கீசு மாப்பிள்ளை 1857 இல் கருத்தாலில் ஈப்பன் மாப்பிள்ளைக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். இவர் தனது தந்தையின் நிதி உதவியுடன் இளங்கலை வரை படித்தார். படிப்பை முடித்ததும், மாப்பிள்ளை கருவூல அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் இவர் ஒரு சி.எம்.எஸ் பள்ளியில் மலையாள ஆசிரியர் வேலையை சிறுது காலத்திற்கு ஏற்றுக்கொண்டார்.

1881 இல் கொச்சியிலிருந்து வெளியிடப்பட்ட ' கேரள மித்ரம் ' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இவரது பத்திரிகை மனமும் இலக்கியத்தின் மீதான அன்பும் 1888 இல் மலையாள மனோரமா நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது. [2] 1890 மார்ச் 22 அன்று, (கொல்லம் ஆண்டு 1065, மீனம் 10) மலையாள மனோரமாவின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. [3]

இலக்கிய பங்களிப்புகள்தொகு

மலையாள மொழி மற்றும் பத்திரிகை ஆகியவை வர்கீசு மாப்பிள்ளையின் ஆன்மாவும் ஆவியும் ஆகும். இவரது தலைமை மற்றும் பார்வையின் கீழ் மலையாள மனோரமா முன்னேற்றம் கண்டது. மலையாள மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்கவும் வளரவும் ஊடகங்களைப் பயன்படுத்தினார். கே.எம் செரியன், கட்டகாயம் செரியன் மாப்பிள்ளை, கொட்டாரத்தில் சங்குண்னி, க. செ. கேசவ பிள்ளை மற்றும் சி. எஸ் சுப்ரமணியம் பொட்டி போன்றவர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். வர்கீசு மாப்பிள்ளை தனது இளம் வயதிலேயே ஒரு நிறுவப்பட்ட எழுத்தாளர் ஆனார். இருப்பினும், வர்கீசு மாப்பிள்ளை எழுதிய குழந்தைகளுக்கான மலையாளக் கதைகளைப் பற்றி பலருக்கும் தெரியாது.

வில்லியம் சேக்சுபியரின் தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூவின் சுயாதீன மலையாள மொழிபெயர்ப்பான அப்ராயகுட்டி மற்றும் கீர்த்தனமாலா என்ற நாடகம் மலையாள இலக்கியத்திற்கு இவர் அளித்த சில பங்களிப்புகள் ஆகும். வர்கீசு மாப்பிள்ளை மலையாள எழுத்தாளர்களுக்காக கவிசமாஜம் என்ற சங்கத்தை உருவாக்கினார். இவர் பாசாபோசினி என்ற ஒரு சங்கத்தையும் உருவாக்கினார். பின்னர் அது இலக்கியத்தையும் மொழியையும் ஊக்குவிக்கும் பத்திரிகையாக மாறியது.

மலையாள எழுத்துக்களை சீர்திருத்துவதில் வர்கீசு மாப்பிள்ளை குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் செய்தார். [4]

குறிப்புகள்தொகு