கண்டாச்சிபுரம் இராமநாதீசுவரர் கோயில்
கண்டாச்சிபுரம் இராமநாதீசுவரர் கோயில் என்பது விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்திலுள்ள சிவன் கோயிலாகும்.[1]
தலவரலாறு
தொகுஇராமன், சீதையைத் தேடி வரும்போது, சிவபூசை செய்தல் பொருட்டு மணலினால் லிங்கத்தை செய்து வழிப்பட்டதாக கூறப்படுகிறது. இராமபிரான் வழிப்பட்டதால் இறைவனுக்கு "இராமநாதேசுரர்" என்று பெயர் வழங்கப்படுகிறது.
அமைவிடம்
தொகுஇக்கோயில் கண்டராதித்த சோழன் காலத்தில் நிறுவப்பட்டது. இக்கோவில் மடவிளாகம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் கல்வெட்டுகளில் "நெற்குப்பையான் கண்டராதித்தபுரம்" என காணப்படுகிறது. கண்டராதித்தன் பெயரால் இவ்வூர் கண்டராதித்தபுரம் என்றாயிற்று.
சந்நிதிகள்
தொகுஅம்பாள் சௌந்தர்ய ஞானாம்பிகை, செல்வ விநாயகர், அறுபத்து மூவர், சோமஸ்கந்தர், இராமன் சீதை லட்சுமணன் ஆஞ்சநேயர், கஜலட்சுமி, நடராஜர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
கோவிலின் உள்ளே கருவறைச் சுவரில் கல்வெட்டுகள் உள்ளன. கருவறைக்குச் செல்லும் வாயிலின் தென்பகுதியில் இராமர், சீதை, அனுமன் சிவபூஜை செய்யும் சிற்பங்கள் சுவரில் உள்ளன.
திருவிழாக்கள்
தொகு- சமயக் குரவர் குருபூசை,
- ஐப்பசியில் கந்த சஷ்டி,
- தை மாதத்தில் பிரமோற்சவம் பத்து நாட்கள்,
- சோம வார வழிபாடு,
- விசாக வழிபாடு,
- மார்கழித் திங்கள் வழிபாடு,
- பிரதோஷ வழிபாடு,
- தேர் பவனி
- சனிப் பிரதோஷம் [2]
- திருவூடல் விழா [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா!". Dinamalar. 30 ஜன., 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில்சனிப்பிரதோஷம் சிறப்பு வழிபாடு". Dinamalar. 30 ஜன., 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)