கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)

தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்

கண்ணம்மா ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘28 மே 2018’ ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:01 க்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு குடும்ப பின்னணியை தழுவிய மெகா தொடர் ஆகும். இந்த தொடரை ஜெனி என்பவர் இயக்க, அர்ச்சனா, சியாம், நிவிஷா, அரவிந்தராஜ், மணி, சாய் மாதவி, புவி ராஜ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2]இந்த தொடர் சில காரணங்களால் 69 அத்தியாங்களுடன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்ணம்மா
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
காதல்
குடும்பம்
நாடகம்
எழுத்துஹிமேஷ் பாலா
வசனம்
வாசகர்
இயக்கம்ஜெனி
நடிப்பு
  • அர்ச்சனா
  • சியாம்
  • நிவிஷா
  • அரவிந்தராஜ்
  • மணி
  • சாய் மாதவி
  • புவி ராஜ்
முகப்பு இசைவிஜய் சரவணா
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்69
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஸ்ரீ பாரதி அஸோசியேட்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுசுதாகர்
தொகுப்புமகேஷ்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைராஜ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்28 மே 2018 (2018-05-28) –
27 செப்டம்பர் 2018 (2018-09-27)

கதைச்சுருக்கம்

தொகு

இந்த தொடரின் கதை கண்ணம்மா தன் குடும்ப சூழல் மற்றும் தன் அப்பாவின் கோபம் இரண்டின் காரணமாகவும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு ஒரு டெய்லராக ஒரு ஃபேஷன் கார்மென்ட்ஸில் வேலை செய்கிறாள். அரவிந்த் அந்த நிறுவனத்தின் முதலாளி ஆரம்பத்தில் இருந்து அரவிந்துக்கும் கண்ணம்மாவுக்கும் ஒருவர் மீது ஒருவரை பிடிக்கவில்லை. கண்ணம்மாவை தனது அலுவலகத்தில் வேலைக்கு வைத்ததே அவளை பழி வாங்குவதற்குத்தான்.

இந்நிலையில் கண்ணம்மாவே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவளது முதலாளியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டி அவரையே திருமணம் செய்ய வேண்டியதாகிறது. கண்ணம்மா அவளது கணவனின் மனதையும், தனக்கு எதிர்பாராமல் அமைந்த இந்த வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே இந்த தொடரின் கதை.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • அர்ச்சனா - கண்ணம்மா
  • சியாம் - அரவிந்
  • நிவிஷா - மீரா

துணை கதாபாத்திரம்

தொகு
  • ஆர். ஸ்டெஃபி
  • ஆர். அரவிந்தராஜ்
  • ஜெயா ராஜகோபால்
  • மோனிகா
  • வசந்தி
  • சைத்ரா
  • சரண்யா
  • அமுதா
  • மணி
  • சாய் மாதவி
  • புவி ராஜ்

முகப்பு பாடல்

தொகு

இந்த தொடருக்கான முகப்பு பாடலான ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்ற பாடலுக்கு இளைய கம்பன் பாடல் வரிகள் எழுதியுள்ளார், விஜய் சரவணா இசை அமைக்க, பாடகி சரண்யா சீனிவாசன் இந்த பாடலை பாடியுள்ளார்.

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர் நீளம்
1. "‘கண்ணம்மா கண்ணம்மா’ (முகப்பு பாடல்)"  சரண்யா சீனிவாசன் 3:10

மேற்கோள்கள்

தொகு
  1. "ராஜ் டிவியில் புதிய தொடர் 'கண்ணம்மா'". 4tamilcinema.com. Archived from the original on 2018-05-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-22.
  2. "கண்ணம்மா - ராஜ் டிவியில் புதிய தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-14.

வெளி இணைப்புகள்

தொகு