கண்ணாடி படகு
கண்ணாடி படகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சீயிடே
|
பேரினம்: | செனொப்சிசு
|
இனம்: | 'செ. நெபுலோசா'
|
இருசொற் பெயரீடு | |
செனொப்சிசு நெபுலோசா தெம்னிக் & சேலெஜெல், 1877 | |
கண்ணாடி படகு மீன் பரம்பல் |
கண்ணாடி படகு (Mirror dory)(செனொப்சிசு நெபுலோசா) என்பது சீயிடே குடும்பத்தினைச் சேர்ந்த படகு மீன் சிற்றினம் ஆகும். இது தெற்கு அமைதிப் பெருங்கடலில் 30 முதல் 800 மீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது. இதன் நீளம் 70 செ. மீ. வரை இருக்கும்.
உடலமைப்பு
தொகுகண்ணாடி படகு மீனில் 9 முள்கதிர்களும் 27 மென்மையான கதிர்களும் கொண்ட இரண்டாவது முதுகு துடுப்பு உள்ளது. இடுப்பு துடுப்பு கதிர்களின் முன்னோக்கி மிகவும் நீளமாகக் காணப்படுகிறது. முதுகு மற்றும் குத துடுப்புகளின் அடிப்பகுதியில் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் பெரிய தட்டையான முள்ளெலும்புகள் உள்ளன.
செதில்கள் இல்லாத உடல் ஒரு சீரான வெள்ளி நிறத்தில், கண்ணாடி போன்று பிரகாசமாகவும், ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் ஒரு தெளிவற்ற இருண்ட திட்டுடன் காணப்படும்.
மாதிரி சேகரிப்பு
தொகு2003ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாத கால நார்பேன்சு பயணத்தில், நார்போக் திட்டு கடற்பகுதி மற்றும் சரிவுகளின் பல்லுயிர்த்தன்மையை ஆய்வு செய்ததில், 117 சிற்றினங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 1 கிலோ (2.2 lb), எடையில் நான்கு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ NORFANZ Voyage பரணிடப்பட்டது 2012-04-15 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2011-10-29.
- Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Zenopsis nebulosa" in FishBase. March 2006 version.