கதிரியல் அலகுகள் மற்றும் அளவீடுகள் தொடர்பான பன்னாட்டு ஆணையம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கதிரியல் அலகுகள் மற்றும் அளவீடுகள் தொடர்பான பன்னாட்டு ஆணையம் (International Commission on Radiation Units and Measurements, ஐ.சி.ஆர்.யூ, ICRU) என்பது 1925 ஆம் ஆண்டில் பன்னாட்டு கதிரியல் மாநாட்டில் அமைக்கப்பட்ட ஒரு தரப்படுத்தல் அமைப்பாகும். இது ஆரம்பத்தில் எக்சு-கதிர் அலகுக் குழு என்னும் பெயரில் 1950 வரை இருந்து வந்தது. இவ்வமைப்பின் நோக்கம் "அயனியாக்கும் கதிர்வீச்சுக்கான பண்புகள், அவற்றின் அலகுகள் மற்றும் பருப்பொருளுடனான அதன் தொடர்பு, குறிப்பாக கதிர்வீச்சினால் தூண்டப்படும் உயிரியல் விளைவுகளுக்கு கருத்துகள், வரையறைகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்குவது" ஆகும்.[1]
இவ்வாணையம் பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகத்தின் (ஐ.சி.ஆர்.பி) ஒரு சகோதர அமைப்பாகும். பொதுவாக, ஐ.சி.ஆர்.யூ அலகுகளை வரையறுக்கிறது, ஐ.சி.ஆர்.பி கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கு எவ்வாறு அவ்வலகுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பரிந்துரைக்கிறது.
கதிர்வீச்சு அளவுகள்
தொகுபின்வருவனவற்றில் பல அலகுகளை வரையறுத்து அறிமுகப்படுத்துவதற்கு ஆணையம் பொறுப்பேற்றுள்ளது.[2]
பின்வரும் அட்டவணை SI மற்றும் SI அல்லாத அலகுகளில் கதிர்வீச்சு அளவுகளைக் காட்டுகிறது:
அளவு | அலகு | சின்னம் | வரையறை | ஆண்டு | SI அலகில் |
---|---|---|---|---|---|
கதிரியக்க எண் (A) | பெக்கெரல் | Bq | s−1 | 1974 | SI அலகு |
கியூரி | Ci | 3.7 × 1010 s−1 | 1953 | 3.7×1010 Bq | |
ரதர்போர்டு | Rd | 106 s−1 | 1946 | 1,000,000 Bq | |
Radiation exposure (X) | கூலோம்/கிலோகிராம் | C/kg | C⋅kg−1 of air | 1974 | SI அலகு |
ரோண்ட்கன் | R | esu / 0.001293 கி வளி | 1928 | 2.58 × 10−4 C/kg | |
கதிர் ஏற்பளவு (D) | கிரே | Gy | J⋅kg−1 | 1974 | SI அலகு |
எர்க்/கிராம் | erg/g | erg⋅g−1 | 1950 | 1.0 × 10−4 Gy | |
இராட் | rad | 100 erg⋅g−1 | 1953 | 0.010 Gy | |
சமமான ஏற்பளவு (H) | சீவெர்ட் | Sv | J⋅kg−1 × WR | 1977 | SI அலகு |
ரோண்ட்கன் சமமான மனிதன் | rem | 100 erg⋅g−1 x WR | 1971 | 0.010 Sv | |
ஒரே விளைவு-ஏற்பளவு (E) | சீவெர்ட் | Sv | J⋅kg−1 × WR x WT | 1977 | SI அலகு |
ரோண்ட்கன் சமமான மனிதன் | rem | 100 erg⋅g−1 x WR x WT | 1971 | 0.010 Sv |
எஸ்.ஐ. அலகுகளுடன் கியூரி, ராட் மற்றும் ரெம் ஆகிய அலகுகளைப் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தாலும்,[3] ஐரோப்பிய ஒன்றியம் "பொது சுகாதார ... நோக்கங்களுக்காக" அவற்றின் பயன்பாடு 1985 திசம்பர் 31 இற்குள் படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் என அறிவித்தது.[4]
பயனுள்ள அலகுகள்
தொகுகதிர்வீச்சிற்கான அலகு.
கதிர் ஏற்பளவிற்கான அலகு.
சம கதிர் ஏற்பளவிற்கான அலகு.
கதிரியக்கத்திற்கான அலகு.
முதலில் சிறப்பு அலகுகளைப் பார்ப்போம்.
கதிர்வீச்சளவு என்பது கதிர்களின் அயனியாக்கும் பண்பினை அடிப்படையாகக் கொண்டது. இதன் அலகு இராண்ஜன் என்பது ஆகும். இவ்வலகு 1928-ல் எக்சு மற்றும் காமா கதிர்களுக்கு வரையறுக்கப்பட்டது.
இராண்ஜன்-. எந்த அளவு எக்சு அல்லது காமா கதிர்கள், ஒரு கன சென்றி மீட்டர் பருமனளவும் 0.001293 நிறையும் கொண்ட உலர்ந்த காற்றில் விழுந்து ஒரு நிலை மின் அலகு நேர் மின்னூட்டம் அல்லது எதிர் மின்னூட்டம் உடைய துகள்களை வெளிவிடுகிறதோ அக்கதிர் வீச்சளவு ஒர் இராண்ஜன் எனப்படும்.
இந்த அலகு
1 எக்சு மற்றும் காமா கதிர்களுக்கு மட்டும் பொருந்தும்.
2 வளியிலேயே அளவீடுகள் மேற்கொள்ள வேண்டும்.
3 மூன்று மி.எ.வோ.வரையிலான கதிர்களுக்கே பொருந்தும்.
கதிர் ஏற்பளவு என்பது ஒரு பொருள் தன்னில் விழும் கதிர்வீச்சில் எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனைக் குறிக்கும்.இதன் அலகு ரேட் ஆகும்.
ரேட்( ) என்பது ஒரு கிராம் நிறையுடைய பொருளில் 100 எர்க் ஆற்றல் படிந்துள்ளதனைக் குறிக்கும்.100 எர்க்/கிராம்.
இவ்வலகின் சிறப்பு.
1 எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தும்
2 எல்லா ஆற்றல் கதிர்களுக்கும் பொருந்தும்
3 எல்லா வகை கதிர்வீச்சிற்கும் பொருந்தும்.
கதிர்வீச்சளவும் கதிர் ஏற்பளவும்-கதிர்வீச்சளவு என்பது ஓர் ஊடகத்தில் படும் கதிரின் அளவு,கதிர் ஏற்பளவு என்பது ஊடகத்தால் ஏற்றுக் கொளப்பட்ட அளவு.படுகதிர் - விடுகதிர் =ஏற்பளவு.
ஒருங்கிணைந்த ஏற்பளவு (Integral dose ) என்பது கதிர்கள் செல்லும் அத்தனை இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட மொத்த கூட்டு ஏற்பளவாகும்.இதன் அலகு
கிராம்-ரேட் ஆகும்.
ஒரு கிராம்-ரேட் =100 எர்க்/கிராம்.
நேர்கோட்டில் ஆற்றல் பரிமாற்றம் (Linear Energy transfer- LET ).- நேர்கோட்டில் ஆற்றல் இழப்பின் வீதமாகும்.இது அங்கு ஏற்கப்பட்ட கதிர் அளவாகும்.
அலகு-கிலோ எலக்ட்ரான் வோல்ட்/ மைக்ரான் ஆகும்.
ஒரு துகளின் நேர் கோட்டில் ஆற்றல் பரிமாற்றம் அதன் நிறை மற்றும் மின்னூட்டதினை பொறுத்து அமையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ (26–30 August 2002) "The ICRU: General Objectives and Achievements with regard to Occupational Radiation Protection". {{{booktitle}}}, 99–110.
- ↑ "International Commission on Radiation Units and Measurements" (PDF). International Commission on Radiation Units and Measurements. 14 March 2012. Archived from the original (PDF) on 29 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 10 CFR 20.1004. US Nuclear Regulatory Commission. 2009.
- ↑ The Council of the European Communities (1979-12-21). "Council Directive 80/181/EEC of 20 December 1979 on the approximation of the laws of the Member States relating to Unit of measurement and on the repeal of Directive 71/354/EEC". பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.