கதிர்பாரதி

கதிர்பாரதி என்ற பெயரில் எழுதும் செங்கதிர்ச்செல்வன் தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்காவில் உள்ள முத்துவீரக்கண்டியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆனந்த விகடன் நிறுவனத்தின், விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராகவும், கல்கி, ஆனந்த விகடன் வார இதழ்களில் தலைமை உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் புனைவுப் பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிகிறார். இவருடைய கவிதைகள் கல்கி, ஆனந்த விகடன், கணையாழி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, யுகமாயினி, சௌந்தரசுகன், அகநாழிகை போன்ற அச்சிதழ்களிலும், உயிரோசை, சிக்கிமுக்கி, பனிமுலை போன்ற மின்னிதழ்களிலும் வெளியாகியுள்ளன.

கதிர்பாரதி

விருது தொகு

  • இவர் எழுதிய “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” [1]என்கிற முதல் கவிதைத் தொகுப்பு நூலுக்கு சாகித்திய அகாதமி யுவபுரஸ்கார் விருது - 2013
  • தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து வழங்கிய மாநில அளவிலான படைப்பிலக்கிய விருது - 2013.[2]
  • எழுத்தாளர் ஜெயந்தன் (எழுத்தாளர்) நினைவாக வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது - 2013.
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது - 2014.
  • களம்புதிது கவிதை விருது - 2014. இந்தப் புத்தகம் கேரளா கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் எம். ஏ தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக இருக்கிறது.[சான்று தேவை]

இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ``ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்’ 2016 ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. அதே ஆண்டு உயிர்மை சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா கவிதை விருதுக்கும், வாசகசாலை வழங்கும் சிறந்த கவிதைத் தொகுப்பு விருதுக்கும் இந்தப் புத்தகம் தேர்வானது.

மேற்கோள்கள் தொகு

  1. "கதிர்பாரதியின் " மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" – கவிதை நூல் விமர்சனம்" (in அமெரிக்க ஆங்கிலம்). திண்ணை. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  2. 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது: எழுத்தாளர்கள் ரேவதி, கதிர்பாரதி தேர்வு தினமணி, ஆகத்து 23, 2013

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்பாரதி&oldid=3702311" இலிருந்து மீள்விக்கப்பட்டது