கத்தரீன் ஹவார்ட்
கேத்தரீன் ஹவார்டு (Catherine Howard, அண். 1523 – 13 பெப்ரவரி 1542)[1] இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரின் ஐந்தாவது மனைவியாக 1540 முதல் 1541 வரை இங்கிலாந்தின் அரசியாக இருந்தவர். இவர் எட்மண்ட் ஹவார்ட் பிரபு, ஜோயிசு கல்பெபெர் ஆகியோரின் மகளும், எட்டாம் என்றி மன்னரின் இரண்டாம் மனைவி ஆன் பொலினின் உடன்பிறவா சகோதரியும், நோர்போக் கோமகன் தோமசு ஹவார்டின் மருமகளும் ஆவார். என்றியின் அரசவையில் தோமசு ஹவார்ட் ஒரு முக்கிய அரசியல் புள்ளியாக இருந்து வந்தார். இவரது செல்வாக்கினால், என்றியின் நான்காவது மனைவியான கிளீவ்சின் ஆனின் வீட்டில் கேத்தரீன் தங்க இடம் கிடைத்தது.[2] இதன் மூலம் கேத்தரீன் மன்னரினால் ஈர்க்கப்பட்டார்.[3] ஆனுடனான மணமுறிவை அடுத்து கேத்தரீன் 1540 சூலை 28 இல் என்றியை ஓட்லண்ட்சு அரண்மனையில் மணம் புரிந்தார். மன்னருக்கு அப்போது அகவை 49 ஆகும், கேத்தரீனின் அகவை 16 அல்லது 17 ஆகும்.[4]
கத்தரீன் ஹவார்ட் | |
---|---|
![]() | |
இங்கிலாந்து அரசி | |
Tenure | 28 ஜூலை 1540 – 23 நவம்பர் 1541 |
பிறப்பு | அண். 1521-25 லாம்பெத், இங்கிலாந்து |
இறப்பு | 13 பெப்ரவரி 1542 இலண்டன் கோபுரம், இலண்டன், இங்கிலாந்து | (அகவை 18–19)
புதைத்த இடம் | 13 பிப்ரவரி 1542 புனித பீட்டர் தேவாலயம், இலண்டன் கோபுரம், இலண்டன் |
துணைவர் | |
குடும்பம் | ஹவார்ட் |
தந்தை | லார்ட் எட்மண்ட் ஹவார்ட் |
தாய் | ஜாய்ஸ் கல்பெப்பர் |
கையொப்பம் | ![]() |
1541 நவம்பரில், கத்தரின் ராணி என்ற பட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது உறவினர் தாமசு கல்பெப்பருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக[5][6][7] தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[8]
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆறு மனைவிகள் |
---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
மேற்கோள்கள் தொகு
- ↑ Byrne, Conor (1 August 2014). "Katherine Howard's Birthday". http://onthetudortrail.com/Blog/2014/08/01/katherine-howards-birthday-a-guest-post-by-conor-byrne/. பார்த்த நாள்: 19 March 2016.
- ↑ Weir 1991, ப. 413.
- ↑ Letters and Papers; Correspandance Politique; Weir, Henry VIII, p.432-3
- ↑ Letters and Papers; Weir, Henry VIII, p.437
- ↑ "Letter of Queen Catherine Howard to Master Thomas Culpeper, Spring 1541". Catherine Howard (Englishhistory.net) இம் மூலத்தில் இருந்து 10 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121010022828/http://englishhistory.net/tudor/letter13.html. பார்த்த நாள்: 31 December 2013.
- ↑ Farquhar 2001, ப. 77.
- ↑ Smith 1961, ப. 170–171.
- ↑ Weir 1991, p. 483
- Alison Weir (historian) (1991). The Six Wives of Henry VIII. New York: Grove Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8021-3683-4.
- Farquhar, Michael (2001). A Treasure of Royal Scandals. New York: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7394-2025-9.
- Lacey Baldwin Smith (1961). A Tudor tragedy: The life and times of Catherine Howard. New York: Pantheon.
வெளி இணைப்புகள் தொகு
- Fifty Shades of Catherine Howard, archived from the original on 2016-04-29, retrieved 2019-07-08
- கத்தரீன் ஹவார்ட் at Find a Grave
- A very brief overview of Catherine's life, accompanied by a portrait gallery
- Letter from Catherine Howard to Thomas Culpeper
- Catherine Howard பரணிடப்பட்டது 2007-10-05 at the வந்தவழி இயந்திரம் A biography
- A geo-biography tour பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம் of the Six Wives of Henry VIII on Google Earth
- PBS Six Wives of Henry VIII, which describes Catherine's death
- Catherine Howard at Flickr