கத்ரீனா கைஃப்

(கத்ரினா கைஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கேட்ரீனா கய்ஃப் (கேட்ரீனா டர்க்கியுட் பிறப்பு: ஜூலை 16, 1984)பிரித்தானிய இந்திய நடிகை. இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம்.படங்களில் நடித்துள்ளார்.

கேட்ரீனா கய்ஃப்

இயற் பெயர் கத்ரின டர்க்கியுட்
பிறப்பு 16 சூலை 1987 (1987-07-16) (அகவை 37)
ஹாங் காங்
தொழில் விளம்பர அழகி, நடிகை
நடிப்புக் காலம் 2002 – நிகழ்காலம்
துணைவர் விக்கி கௌசல்(2021-

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஹாங்காங்கில் பிறந்த கய்ஃபின் தந்தை,[1] முகம்மது கய்ஃப் ஒரு காஷ்மீர்க்காரர், அவரது தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் பின்னர் அறக்கட்டளைப் பணிகளில் ஈடுபட்டார். கேட்ரீனா இளம் வயதாக இருந்த போதே பெற்றோர் விவாகரத்து பெற்று தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். ஹாங்காங்கில் வளர்ந்த கய்ஃப் பின்னர் அவரது அம்மாவின் தாய்நாடான இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.கேட்ரீனாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர்.

தொழில் வாழ்க்கை,சொந்த வாழ்க்கை

தொகு

தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். இலண்டனில் ஒப்பந்த அடிப்படையில் மாடல்ஸ் 1 என்னும் முகமை மூலம் வடிவழகு பணியைத் தொடர்ந்த அவர் லா சென்ஸா மற்றும் அர்காடியுஸ் போன்ற நிறுவன விளம்பரங்களில் தோன்றினார், இவ்வாறு இலண்டன் ஃபேஷன் வீக் நிகழ்வுகளிலும் இடம் பெற்றார்.

கேட்ரீனாவின் வடிவழகு பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான வடிவழகு வாய்ப்புகள் குவிந்தன. எனினும் கேட்ரீனாவுக்கு ஹிந்தி பேசத்தெரியாது என்ற காரணத்தால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சிறிது தயங்கினார்கள்.[2]

2005 ஆம் ஆண்டில் வெளியான சர்க்கார் படத்தில் அபிசேக் பச்சனின் தோழியாக சிறுவேடத்தில் நடித்ததன் வாயிலாக கேட்ரீனா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது அடுத்த படமான மைனே ப்யார் க்யூன் கியாவில் (2005), சல்மான் கானின் இணையாக நடித்தார்.

2007-ஆம் ஆண்டு நமஸ்தே லண்டன், படத்தில் பிரித்தானிய-இந்தியப் பெண்ணாக அக்ஷய் குமாரின் ஜோடியாக நடித்த இரண்டாவது படமும் வெற்றிப்படம் ஆனது. அதற்கு முன் இதே ஜோடி நடித்த ஹம்கோ தீவானா கர் கயே (2006) திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.[3] அதன்பின்னர், அவர் நடித்த அப்னே, பார்ட்னர், வெல்கம் போன்ற அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்களாகத் திகழ்ந்தன

2008 ஆம் ஆண்டில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முதன்முதலாக இவர் நடித்த அப்பாஸ் முஸ்தான் தயாரித்த அதிரடித் திரைப்படம் ரேஸ் வெற்றிப்படமாயிற்று. இப்படத்தில் சயிஃப் அலிகானின் செயலாளராகவும், எதிர்கோஷ்டியைச் சேர்ந்த சயிஃபின் சகோதரர் அக்ஷய் கன்னா மீது காதல் வயப்படுபவராகவும் அவர் நடித்தார்.

இதே ஆண்டு அனீஸ் பாஸ்மீயின் தயாரிப்பில் வெளியான கேட்ரீனாவின் இரண்டாவது படமான சிங் ஈஸ் கிங்கில் அவர் அக்க்ஷய்குமாரின் ஜோடியாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே ஆண்டின் இறுதியில் சுபாஷ் கெய்யின் தயாரிப்பில் வெளியான யுவராஜ் நெருக்கடி மற்றும் தோல்வியைச் சந்தித்தது.[4] எனினும் இதன் திரைக்கதை அகாடமி ஆஃப் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் நூலகத்தில் இப்படத்தின் கலைத்திறனும், மூலத் திரைக்கதையும் மற்றும் அதனின் பொருள் மற்றும் முழுத் திரைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

 
ராஜநீதி(Raajneeti) புத்தக வெளியீட்டு விழாவில் கத்ரீனா கைப் 2012

2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கேட்ரீனா ஜான் ஆப்ரஹாமுடன் நடித்த நியூ யார்க் வணிக அளவில் பெரிய வெற்றி பெற்றது.[5] இப்படத்தில் கேட்ரீனாவின் நடிப்பைத் திறனாய்வாளர் தாரன் ஆதர்ஷ் பின்வருமாறு பெரிதும் பாராட்டினார்: ”கேட்ரீனா இப்படத்தில் பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறார். கவர்ச்சி வேடத்தில் மட்டுமே நடித்த அவர், தற்போது இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் எதிர்பார்க்கும் நடிப்பைத் தன்னால் வெளிப்படுத்த முடியும் என இவ்வேடத்தின் வாயிலாக மெய்ப்பித்துள்ளார். அவர் முனைப்பானவர். இன்னும் சொல்லவேண்டும் எனில் மக்கள் புதிய மாறுபட்ட கேட்ரீனாவை இனி பார்க்கப்போகிறார்கள்.”[6]

இதையடுத்து கேட்ரீனா பல நட்சத்திரங்கள் நடித்த அதிரடித் திரைப்படமான ப்ளூவில், சிறுவேடத்தில் தோன்றினார். இது இந்தியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ஆழ் கடல் திகில் படமாகும்.[7], இது வர்த்தகரீதியாக சிறிய வெற்றியை மட்டுமே பெற்றது. இது ஒரு வெற்றிப்படமாக கருதப்படவில்லை.[8]

அவ்வருடத்தின் இறுதியில், ரன்பீர் கப்பூருடன் இணைந்து அஜப் பிரேம் கி காசாப் கஹானி மற்றும் அக்ஷய் குமாருடன் இணைந்து தே தான தன் ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் வர்த்தகரீதியாக வெற்றிபெற்றன.

2010 இல் இவரது முதல் படமான ராஜ்நீதியில் ரன்பீர் கப்பூருடன் இணைந்து நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. கேட்ரீனா தற்பொழுது அக்ஷய் குமாருடன், ஃபாரா கானின் தீஸ் மார் கான் நடித்து வருகிறார். இப்படம் 24 டிசம்பர் 2010 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 2010 செப்டம்பரில், ஒரு செய்தித்தாளில் வெளியான செய்தியில் பாலிவுட்டின் மிகச்சிறந்த ஆறு நடிகைகளில் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் மற்றும் கங்கனா ரணவத் ஆகியோருடன் பட்டியலிடப்பட்டார். 2021 டிசம்பர்9 இல் விக்கி கௌசல் -ஐ மணம் புரிய உள்ளார்.

ஊடகங்களில்

தொகு

நடிகர் சல்மான்கானுடன் 2003 ஆம் ஆண்டு தொடங்கி நெருக்கமான நட்பை கேட்ரீனா பேணிவருகிறார்.[9]. கேட்ரீனா இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஈஸ்டன் ஐ பப்ளிகேஷன் 2008 ஆம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில் ஆசியாவின் இனக்கவர்ச்சி மிக்க பெண்ணாகவும், அதே 2008 ஆம் ஆண்டில் கூகுள் இந்தியா இணையத்தில் அதிகமாக வலைதளத்தில் தேடிய நபராகவும் அறியப்பட்டார்.[10] அண்மையில் நியூயார்க் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் ரியாலிட்டி ஷோவான தஸ் கா தம் நிகழ்ச்சியில் நீல் நிதின் முகேஷ் உடன் தோன்றினார்.[11] தான் நடித்த யுவராஜ் படத்தை விளம்பரப்படுத்தும் பாட்டுப்போட்டித் திறன் நிகழ்ச்சியான ஸரிகமப-வில் சல்மான்கானுடன் தோன்றினார்.[12] செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில் வெளியான மேட்டல்’ஸ் பாலிவுட் பொம்மை விளம்பரத்திலும் கேட்ரீனா மாடல் ஆகத் தோன்றியுள்ளார்.[13]

விருதுகள்

தொகு
  • 2006: ஒட்டுமொத்த நடிப்பிற்கான ஸ்டார்டஸ்ட் விருது (பெண்), மைனே ப்யார் க்யூன் கியா?
  • 2008: ஸீ சினிமா விருதுகள், பிரித்தானிய இந்திய நடிகருக்கான விருது 2008
  • 2008: ஐ ஐ எஃப் ஏ விருதுகள் அந்த ஆண்டின் ஸ்டைல் தோற்றத்திற்கானது.
  • 2008: சப்சே ஃபேவரிட் கான் விருதுகள், சப்சேவின் அபிமான கதாநாயகி, சிங் இஸ் கிங்
  • 2009: ராஜிவ் காந்தி விருது[14]

படப் பட்டியல்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2003 பூம் ரீனா கைஃப்
2004 மல்லீஸ்வரி இளவரசி மல்லீஸ்வரி தெலுங்கு
2005 சர்கார் பூஜா
2005 மேனே ப்யார் க்யூன் கியா? சோனியா
2005 அல்லாரி பிடுகு ஸ்வேதா தெலுங்கு
2006 ஹம் கோ தீவானா கர் கயே
2006 பல்ராம் வெர்ஸஸ் தாராதாஸ் சுப்ரியா மலையாளம்
2007 நமஸ்தே லண்டன் ஜஸ்மீட் மல்கோத்ரா (ஜாஸ்)
2007 அப்னே நந்தினி
2007 பார்ட்னர் ப்ரியா ஜெய்சிங்
2007 வெல்கம் சஞ்ஜனா ஷெட்டி
2008 ரேஸ் சோபியா
2008 சிங் ஈஸ் கிங் சோனியா
2008 ஹலோ கதைசொல்லி/கடவுள் சிறப்புத் தோற்றம்
2008 யுவ்ராஜ் அனுக்ஷ்கா பாண்டோன்
2009 நியூயார்க் மாயா
2009 ப்ளூ நிக்கி சிறப்புத் தோற்றம்
2009 அஜப் ப்ரேம் கி கஜப் கஹானி
2009 தீ தானா தன் அஞ்சலி கக்காட்
2010 ராஜ்நீதி
2010 தீஸ் மார் கான் அன்யா கான்
2011 ஜிந்தகி நா மிலேகி டோபரா லைலா
2011 போடிகார்ட் சிறப்புத் தோற்றம்
2011 மேரே பிரதர் கி டுல்ஹான் டிம்பிள் தீட்சித்
2012 அக்னீபத் சிறப்புத் தோற்றம்
2012 ஏக் தா டைகர் ஜோயா
2012 ஜப் தக் ஹை ஜான் மீரா தாபர்
2013 மெயின் கிருஷ்ணா ஹூண் ராதா
2013 பாம்பே டாக்கீஸ் அவராகவே சிறப்புத் தோற்றம்
2013 தூம் 3
2014 பேங் பேங்!
2015 ஃபேண்டம் நவாஸ் மிஸ்ட்ரி

குறிப்புகள்

தொகு
  1. ""I can speak Hindi fluently but my accent is not that perfect. But in time I can achieve it"". Bollywood Hungama. Archived from the original on 2010-01-11. பார்க்கப்பட்ட நாள் 2009-11-02. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. Krishna, Kaavya. "Katrina Kaif Profile - Sify.com". Sify. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "Box Office 2007". BoxOffice India.com. Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2010-04-07. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "Box Office 2008". BoxOfficeIndia.com. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-04-07. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. Tuteja, Joginder. ""New York's super-success has surprised me" - Kabir Khan". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. Adarsh, Taran. "Bollywood Hungama Review: New York". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. IANS. "Gear up for India's first underwater thriller in 'Blue'". Thaindian News. Archived from the original on 2009-10-15. பார்க்கப்பட்ட நாள் 2009-10-15. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  8. "Blue Has Good First Week All The Best Steady". Boxofficeindia.Com. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-24. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  9. Menon, Sita (July 21,2003). "Katrina's beautiful, and she knows it". பார்க்கப்பட்ட நாள் 2008-01-26. {{cite web}}: Check date values in: |date= (help); Text "Rediff.com" ignored (help)
  10. Bollywood Hungama News Network. "Katrina voted Sexiest Asian Woman; also most searched person on Google". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  11. {{cite web|title=Katrina Kaif and Neil Nitin Mukesh on 10 Ka Dum|author=Bollywood Hungama News Network|publisher=[[Bollywood Hungama|url=http://www.bollywoodhungama.com/slideshow/2009/06/16/410/index.html%7Caccessdate=2009-06-16}}
  12. Bollywood Hungama News Network. "Salman & Katrina burn the dance floor at Sa Re Ga Ma Pa Challenge 2009". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2008-11-06. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  13. Van Deven, Mandy. "Bollywood Barbie". Bitch Magazine. Archived from the original on 2009-05-08. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  14. "Shahid Kapoor, Katrina Kaif among Rajiv Gandhi Awards winners". New Kerala. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரீனா_கைஃப்&oldid=3924782" இலிருந்து மீள்விக்கப்பட்டது