கந்தக இருபுரோமைடு
வேதிச் சேர்மம்
கந்தக இருபுரோமைடு (Sulfur dibromide) என்பது SBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது நச்சுத்தன்மை மிகுந்த ஒரு வாயுவாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
14312-20-0 | |
ChemSpider | 123231 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139733 |
| |
பண்புகள் | |
SBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 191.873 கி/மோல் |
தோற்றம் | வாயு |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
C2v |
மூலக்கூறு வடிவம் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1661 |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கந்தக இருபுரோமைடு S2Br2 சேர்மமாகவும் தனிம புரோமினாகவும் எளிதில் சிதைகிறது. கந்தக இருகுளோரைடுடன் ஒப்பிடுகையில், இது தண்ணீருடன் சேர்ந்து நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு ஐதரசன் புரோமைடு, கந்தக டை ஆக்சைடு மற்றும் தனிம கந்தகத்தை கொடுக்கிறது.
HBr உடன் SCl2 சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் கந்தக இருபுரோமைடைத் தயாரிக்கலாம். ஆனால் இதன் விரைவான சிதைவுப் பண்பு காரணமாக நிலைப்புத்தன்மை நிலைகளில் இதை தனிமைப்படுத்த முடியாது. மாறாக, மிகவும் நிலைப்புத்தன்மை கொண்ட S2Br2 பெறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001). Inorganic Chemistry. Academic Press. p. 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9.