கனகாலா
கனகாலா (Kanagala) இந்திய மாநிலமான ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது இராப்பள்ளி வருவாய் பிரிவின் செருகுபள்ளி மண்டலத்தில் அமைந்துள்ளது.
கனகாலா Kanagala | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°04′48″N 80°44′19″E / 16.08000°N 80.73861°E | |
நாடு | இந்தியா |
State | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பாபட்லா |
வட்டம் (தாலுகா) | செருகுபள்ளி மண்டல் |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து இராச்சியம் |
• நிர்வாகம் | கனகாலா கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,249 ha (3,086 acres) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 7,192 |
• அடர்த்தி | 580/km2 (1,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522259[4] |
இடக் குறியீடு | +91–8648 |
வாகனப் பதிவு | ஆ.பி |
புவியியல்
தொகுமண்டலத் தலைமையகமான அரும்பகாவின் வடமேற்கில், 16°04′48′′N 80°44′19′′E [5] ஆள்கூறுகளில் 1249 எக்டேர் (3,090 ஏக்கர்) பரப்பளவில் கனகாலா பரவியுள்ளது. வெள்ளத்தூர் கால்வாயிலிருந்து கிராமத்திற்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குதல் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. [6]
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 7,192 ஆகும். இம் மொத்த மக்கள் தொகையில் 3,585 ஆண்கள், 3,607 பெண்கள் இருந்தனர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட 624 குழந்தைகள் இதில் அடங்குவர். கனகாலா கிராமத்தின் சராசரி கல்வியறிவு சதவீதம் 68.77% ஆகும். இதன்படி 4,517 பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். கிராம மக்களில் 2,970 தொழிலாளர்கள், 538 விளிம்பு நிலை தொழிலாளர்கள் மற்றும் 4,222 பேர் வேலையில்லாதவர்கள் ஆவர். தொழிலாளர்களில் 219 விவசாயிகள், 1,279 விவசாயத் தொழிலாளர்கள், 172 வீட்டுத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் 762 பேர் பிற பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடங்குவர்.
அரசும் அரசியலும்
தொகுகனகாலா கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
கல்வி
தொகுகல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 11 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 8 மண்டல் பரிசத்து பள்ளிகளும் 3 தனியார் பள்ளிகள் அடங்கும்.[7]
மேற்கோள்கள்ள்
தொகு- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 99. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 480. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "Pin Code: Kanagala (guntur), Guntur, Andhra Pradesh is 522259". Pincode.org.in. பார்க்கப்பட்ட நாள் 9 December 2015.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 794–795. பார்க்கப்பட்ட நாள் 4 June 2019.
- ↑ "Scheme Profile". indiawater.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)