கனிஷ்கரின் தூபி

கனிஷ்கரின் தூபி (Kanishka stupa) (உருது: کنشک اسٹوپ‎) குசானப் பேரரசர் கனிஷ்கர் கிபி 150 - 200ல், தற்கால பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் பௌத்த தூபியை நிறுவினார். [1][1]13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

கனிஷ்கரின் தூபி
کنشک اسٹوپ
கனிஷ்கர் நிறுவிய தூபியின் சிதிலங்களின் வரைபடம், 1899, சாஜி கி தேரி, பெஷாவர், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
கனிஷ்கரின் தூபி is located in பாக்கித்தான்
கனிஷ்கரின் தூபி
Shown within Pakistan
இருப்பிடம்சாஜி கி தேரி, பெஷாவர், கைபர் பக்துன்வா மாகாணம்
பகுதிபாகிஸ்தான்
ஆயத்தொலைகள்33°59′58″N 71°35′30″E / 33.9994°N 71.5918°E / 33.9994; 71.5918
வகைதூபி
பகுதிகுசான் பேரரசு, ஹெப்தலைட்டுகள்
உயரம்400 அடிகள் (120 m) to 560 அடிகள் (170 m)
வரலாறு
காலம்கிபி இரண்டாம் நூற்றாண்டு
கனிஷ்கர் தூபி பகுதியில் அகழாய்வில் கிடைத்த கனிஷ்கர் பேழை, பெசாவர் அருங்காட்சியகம்
கனிஷ்கர் தூபி அருகே கிடைத்த பௌத்த தொல்லியல் சின்னங்கள், இவைகள் தற்போது மியான்மர் நாட்டின் மண்டலையில் உள்ளது

கிபி 300ல் வெள்ளை ஹூணர்களால் இந்நகரம் முற்றுகையிடப்பட்ட போது, இடிக்கப்பட்ட இத்தூபி மீண்டும் கட்டப்பட்டது.[1] கருங்கலில் வடித்த இத்தூபி பண்டைய பௌத்த நினைவுச் சின்னங்களில் புகழ் பெற்றதாகும். சிதைந்த இத்தூபிக்கு அருகில் அகழாய்வு செய்த போது, அழகிய செப்புப் பேழையும், அதனுள் இருந்த மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தனர். அச்செப்புப் பேழைக்கு கனிஷ்கர் பேழை எனப்பெயரிடப்பட்டது.

கனிஷ்கர் பேழையில் இருந்த கௌதம புத்தரின் மூன்று உடைந்த எலும்புத்துண்டுகள் , மியான்மர் நாட்டின் மண்டலை நகரத்தின் மண்டலை மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. [2][3]

இயற்கைய அழிவுகள்

தொகு

கிபி ஆறாம் நூற்றாண்டின் சீன பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவாங், தமது பயணக் குறிப்பில், இத்தூபி மூன்று முறை இடி தாக்கப்பட்டு, சிதைந்து, மீண்டும் எழுப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். [1]

அகழாய்வு

தொகு

1908 - 1909ல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் டேவிட் பிரய்னார்டு ஸ்பூனர் என்பவர் தலைமையில் இத்தூபி அமைந்த இடத்தில் அகழாய்வு செய்த போது, கனிஷ்கர் பேழையும், அதனுள் கௌதம புத்தரின் மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தார். [4] கனிஷ்கர் பேழையிலிருந்த கௌதம புத்தரின் மூன்று எலும்புத்துண்டுகள், மண்டலை நகரத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. [5][3]தற்போது கனிஷ்கர் பேழை, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கனிஷ்கர் தூபியின் தற்போதைய நிலை

தொகு
 
சிற்பங்களுடன் கூடிய தூபி, கிபி இரண்டாம் நூற்றாண்டு, பெசாவர் அருங்காட்சியகம்

175 அடி உயரம் கொண்ட இத்தூபியின் உச்சியை அடைய படிக்கட்டுகளுடன் இருந்தது.[1] [1] [1] [1]தற்போது இத்தூபி முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. இத்தொல்லியல் களம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை. 2011ல் தூபி இருந்த இடத்தை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இத்தூபியின் எஞ்சிய பகுதிகள், பழைய பெஷாவர் நகரத்தின் அகுனாபாத்தில் உள்ளது. [6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Le, Huu Phuoc (2010). Buddhist Architecture. Grafikol. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780984404308. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
  2. Marshall, John H. (1909): "Archaeological Exploration in India, 1908–9." (Section on: "The stūpa of Kanishka and relics of the Buddha"). Journal of the Royal Asiatic Society, 1909, pp. 1056–1061.
  3. 3.0 3.1 Rai Govind Chandra (1 January 1979). Indo-Greek Jewellery. Abhinav Publications. pp. 82–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-088-4. பார்க்கப்பட்ட நாள் 13 December 2012.
  4. Spooner, D. B. (1908–9): "Excavations at Shāh-ji-Dherī." Archaeological Survey of India, p. 49.
  5. Marshall, John H. (1909): "Archaeological Exploration in India, 1908–9." (Section on: "The stūpa of Kanishka and relics of the Buddha"). Journal of the Royal Asiatic Society, 1909, pp. 1056–1061.
  6. Gandhara civilisation: Revered Buddhist site rediscovered near Peshawar, Manzoor Ali, August 27, 2011

மேலும் படிக்க

தொகு
  • D’Ancona, Mirella Levi. (1949): "Is the Kaniṣka Reliquary a work from Mathurā?" Art Bulletin, Vol. 31, No. 4 (Dec., 1949), pp. 321–323.
  • Dobbins, K. Walton. (1971): The Stūpa and Vihāra of Kanishka I. The Asiatic Society of Bengal Monograph Series, Vol. XVIII. Calcutta.
  • Dobbins, K. Walton (1968): "Two Gandhāran Reliquaries." East and West, 18, 1968, pp. 151–165.
  • Hargreaves, H. (1910–11): "Excavations at Shāh-jī-kī Ḍhērī." Archaeological Survey of India, pp. 25–32.
  • Spooner, D. B. (1908-9): "Excavations at Shāh-ji-Dherī." Archaeological Survey of India, pp. 38–59.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிஷ்கரின்_தூபி&oldid=4058082" இலிருந்து மீள்விக்கப்பட்டது