கனிஷ்கர்

வட இந்திய அரசன்

கனிஷ்கர் (Kanishkar) (சமக்கிருதம்: कनिष्क; குசானக் குல பேரரசனாக கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட இந்திய பேரரசன். போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.

கனிஷ்கர்
குசான் பேரரசன்
கனிஷ்கரின் தங்க நாணயம், பிரிட்டன் அருங்காட்சியகம்
ஆட்சிகுசான் பேரரசு: கிபி 78 - 151
முடிசூட்டு விழாChinese records of Yueh-chi show coronation as 78 AD
முன்னிருந்தவர்வீமா காட்பீசஸ்
பின்வந்தவர்குவிஷ்கன்
முழுப்பெயர்
முதலாம் கனிஷ்கர்
இறப்புகிபி 151/163
சமயம்பௌத்தம்
கனிஷ்கர் வென்ற நடு ஆசியாவின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் மதுரா, உஜ்ஜைன், குண்டினபுரம், கௌசாம்பி, பாடலிபுத்திரம், ஜான்சிர்-சம்பா பகுதிகள்

தெற்காசியா & மத்திய ஆசிய படையெடுப்புகள்

தொகு

கனிஷ்கர் மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தற்கால பாகிஸ்தான் பகுதிகளை வென்று, இந்தியாவின் குஜராத் மற்றும் பஞ்சாப் முதல் கங்கை சமவெளியின் பாடலிபுத்திரம் வரை விரிவு படுத்தினான். கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ஆகும். மதுரா நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.[1] பௌத்த சமயத்தை ஆதரித்துப் பரப்பியவர். பட்டுப் பாதை மூலம் பௌத்த சமயத்தை காந்தாரம் வழியாக சீனா உள்ளிட்ட முதலிய கிழக்கு ஆசியா நாடுகள் வரை பரப்பியவர்.

மரபுரிமைப் பேறுகள்

தொகு
 
சிற்பங்களுடன் கூடிய கனிஷ்கரின் தூபி, கிபி இரண்டாம் நூற்றாண்டு, பெசாவர் அருங்காட்சியகம்

தற்கால பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் பௌத்த தூபியை நிறுவினார். இதனை தற்போது கனிஷ்கரின் தூபி என்று அழைக்கப்படுகிறது.[2][2] 13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

 
கிபி 127 காலத்திய கனிஷ்கரின் பேழையின் மூடிப் பகுதியில், கௌதம புத்தரின் இருபுரங்களில் இந்திரன் மற்றும் பிரம்மா மற்றும் அடிப்பகுதியின் நடுவே நின்ற நிலையில் கனிஷ்கர், பெசாவர் அருங்காட்சியகம்
 
கனிஷ்கர் பேழையின் அடிப்புறத்தில் கௌதம புத்தரைச் சுற்றிலும் தேவதைகளும், போதிசத்துவரும்

குசானப் பேரரசர் கனிஷ்கர், தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் நிறுவிய கனிஷ்கரின் தூபி இருந்த இடத்தில், [2][2] 1908 - 1909களில் அகழ்வாராய்ச்சி செய்த போது பௌத்தச் சின்னங்கள் கொண்ட அழகிய செப்புப் பேழை கிடைத்தது. அதற்கு கனிஷ்கர் பேழை எனப்பெயரிடப்பட்டது. பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட இப்பேழை பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில் கிபி 127ல் உருவாக்கப்பட்டது.

பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்

தொகு
 
நிற்கும் புத்தரின் வெண்கல சிலை, காந்தாரம், காலம் 3-4ஆம் நூற்றாண்டு

கி. பி இரண்டாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப்பகுதியான காந்தாரத்திலிருந்து, உலக நலத்திற்கான பிக்குகள் என்ற பெயரில் பௌத்த பிக்குகளை சீனா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பி பௌத்த சமயத்தை பரப்பினார்.

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
 1. "கனிஷ்கரின் தலைநகரம்?". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
 2. 2.0 2.1 2.2 2.3 Le, Huu Phuoc (2010). Buddhist Architecture. Grafikol. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780984404308. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.

மேற்கோள்கள்

தொகு
 • Bopearachchi, Osmund (2003). De l'Indus à l'Oxus, Archéologie de l'Asie Centrale (in French). Lattes: Association imago-musée de Lattes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-9516679-2-2.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 • Chavannes, Édouard. (1906) "Trois Généraux Chinois de la dynastie des Han Orientaux. Pan Tch’ao (32–102 p. C.); – son fils Pan Yong; – Leang K’in (112 p. C.). Chapitre LXXVII du Heou Han chou." T’oung pao 7, (1906) p. 232 and note 3.
 • Dobbins, K. Walton. (1971). The Stūpa and Vihāra of Kanishka I. The Asiatic Society of Bengal Monograph Series, Vol. XVIII. Calcutta.
 • Falk, Harry (2001): "The yuga of Sphujiddhvaja and the era of the Kuṣâṇas." In: Silk Road Art and Archaeology VII, pp. 121–136.
 • Falk, Harry (2004): "The Kaniṣka era in Gupta records." In: Silk Road Art and Archaeology X (2004), pp. 167–176.
 • Foucher, M. A. 1901. "Notes sur la geographie ancienne du Gandhâra (commentaire à un chapitre de Hiuen-Tsang)." BEFEO No. 4, Oct. 1901, pp. 322–369.
 • Gnoli, Gherardo (2002). "The "Aryan" Language." JSAI 26 (2002).
 • Hargreaves, H. (1910–11): "Excavations at Shāh-jī-kī Dhērī"; Archaeological Survey of India, 1910–11.
 • Hill, John E. (2009) Through the Jade Gate to Rome: A Study of the Silk Routes during the Later Han Dynasty, 1st to 2nd centuries CE. BookSurge, Charleston, South Carolina. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4392-2134-1.
 • Kulke, Hermann; Rothermund, Dietmar (1998). A history of India. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15481-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15482-0.
 • Kumar, Baldev. 1973. The Early Kuṣāṇas. New Delhi, Sterling Publishers.
 • Sims-Williams, Nicholas and Joe Cribb (1995/6): "A New Bactrian Inscription of Kanishka the Great." Silk Road Art and Archaeology 4 (1996), pp. 75–142.
 • Sims-Williams, Nicholas (1998): "Further notes on the Bactrian inscription of Rabatak, with an Appendix on the names of Kujula Kadphises and Vima Taktu in Chinese." Proceedings of the Third European Conference of Iranian Studies Part 1: Old and Middle Iranian Studies. Edited by Nicholas Sims-Williams. Wiesbaden. 1998, pp. 79–93.
 • Sims-Williams, Nicholas. Sims-Williams, Nicolas. "Bactrian Language". Encyclopaedia Iranica. Vol. 3. London: Routledge & Kegan Paul. Accessed: 20/12/2010
 • Spooner, D. B. (1908–9): "Excavations at Shāh-jī-kī Dhērī."; Archaeological Survey of India, 1908-9.
 • Wood, Frances (2003). The Silk Road: Two Thousand Years in the Heart of Asia. University of California Press. Hbk (2003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-23786-5; pbk. (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24340-8

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kanishka I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னிருந்தவர்:
விமா கட்பிஸ்சஸ்
குசான் பேரரசு பின்வந்தவர்:
ஹுவிஷ்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிஷ்கர்&oldid=3625523" இலிருந்து மீள்விக்கப்பட்டது