பீமரன் பேழை

பீமரன் பேழை (Bimaran casket or Bimaran reliquary) தங்கத்தால் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கௌதம புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட அழகிய சிறு பேழையாகும்.

பீமரன் பேழை
நவரத்தினங்கள் பொதிக்கபப்ட்ட, பீமரன் தங்கப் பேழையின் மீது நடுவில் கௌதம புத்தர் இடப் புறத்தில் பிரம்மா, வலப்புறத்தில் பௌத்த சக்கன். தற்போது இப்பேழை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
செய்பொருள்தங்கத்தால் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் பொதிக்கப்பட்டுள்ளது.
அளவுஉயரம் 6.7 செ.மீ - சுற்றளவு 6.6 செ.மீ
உருவாக்கம்கிபி முதல் நூற்றாண்டு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவுOA 1900.2-9.1

இப்பேழை, ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்திற்கு 11 கிமீ தொலைவில் உள்ள பீமரன் தூபி எண் 2 அருகே, 1833 மற்றும் 1838ல் அகழ்வாய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிப்பு

தொகு
 
பீமரன் தூபி எண் 2, சார்லஸ் மேசனின் வரைபடம்

தொல்லியல் ஆய்வாளர் சார்லஸ் மேசன் என்பவர் 1833 மற்றும் 1838ல் பீமரன் தூபி எண் 2 அருகே அகழாய்வு செய்த போது, பீமரன் தங்கப் பேழை கண்டுபிடிக்கப்பட்டது.

பிரம்மா, இந்திரனுக்கு நடுவில் கௌதம புத்தர் உருவங்கள் பொறிக்கப்பட்ட இத்தங்கப் பேழையில் இந்தோ சிதியன் பேரரசு (கி மு 200 – கி பி 400) காலத்திய நாணயங்கள் இருந்தது.

பீமரன் பேழையின் காலம் 0 - கிபி 15 என பியூஸ்மேனும், கிபி 50 - 60 என பிரித்தானிய அருங்காட்சியகமும் கூறுகின்றனர்.

தற்போது பீமரன் பேழை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [1]

பீமரன் பேழையின் குறிப்புகள்

தொகு
 
புத்தரி அஸ்தி கொண்ட பீமரன் பேழை, பீமரன் தூபி, ஆப்கானித்தான்
 
பீமரன் தங்கப் பேழை மீது அஞ்சலி முத்திரை காட்டும் கௌதம புத்தரின் நின்ற கோலம்

தங்கத்தால் செய்யப்பட்ட இச்சிறு அழகிய பேழை, பாரம்பரிய தெற்காசியாவின் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. [2] இப்பேழை மூடியுடன் கூடியதாகும்.[2] இத்தங்கப் பேழையின் அடிப்புறத்தில் தாமரையை அழகுற பொறித்துள்ளனர்.[2]

கிரேக்கர்களின் ஹெலனியக் கால கலை மற்றும் காந்தாரக் கலை நயத்தில் பீமரன் பேழை வடிவமைக்கப்பட்டுள்ளது. [2]

கௌதம புத்தரின் இருபுறங்களில் பிரம்மா, இந்திரன் மற்றும் புத்தரின் சீடர்களான போதிசத்துவர்களின் உருவங்களுடன், ஆப்கானிய ரத்தினங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

பேழையில் இருந்த பொருட்கள்

தொகு
 
கரும் படிகக் கல் பேழை மீதான குறிப்புகள்

பீமரன் பேழை வைக்கப்பட்டிருந்த கரும் படிகக்கல்லான பெரிய பேழை மீது, பீமரன் பேழையில் உள்ள வைக்கப்பட்டிருந்த நினைவுப் பொருட்கள் குறிப்புகள் கொண்டிருந்தது.

19ம் நூற்றாண்டில் இப்பேழை கண்டுபிடித்து திறந்து பார்த்த போது, பேழையில் குறித்த பொருட்கள் காணப்படவில்லை எனினும், எரிந்த முத்துக்களும், விலையுயர்ந்த மற்றும் விலை குறைந்த ரத்தினங்களும், இந்தோ சிதியன் பேரரசு காலத்திய நான்கு நாணயங்களும் இருந்தது.

பீம்ரன் பேழை வைத்திருந்த படிகக்கல் பேழை மீது எழுதியுள்ள குறிப்புகள்: [1]:

கரும் படிகக் பேழையின் வெளிப்புறத்தில்:
"Shivaraksita mumjavamdaputrasa danamuhe niyadide bhagavata sharirehi sarvabudhana puyae"
"Sacred gift of Shivaraksita, son of Munjavamda; presented for Lord's relics, in honour of all Buddhas" (Translation by Fussman)
கரும் படிகக் பேழையின் மூடி மீது:
"Shivaraksita mumjavamdaputrasa danamuhe bhagavata sharirehi"
"Gift of Shivaraksita, son of Munjavamda; presented for Lord's relics"


பீமரன் பேழையின் காலம், ஏறத்தாழ கனிஷ்கர் பேழையின் காலமான கிபி 127 உடன் ஒத்துப்போகிறது.

பீமரன் பேழையின் வேறு காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bimaran casket
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. British Museum Highlights
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "The crossroads of Asia", edited by Ellizabeth Errington and Joe Cribb, The ancient India and Iran Trust, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0951839918, p.189-190

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமரன்_பேழை&oldid=4058077" இலிருந்து மீள்விக்கப்பட்டது