கபிலவஸ்து மாவட்டம்

கபிலவஸ்து மாவட்டம் (நேபாளி: कपिलवस्तु जिल्लाகேட்க), நேபாளத்தின் மாநில எண் 5-இல், லும்பினி மண்டலத்தில் அமைந்த, நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கபிலவஸ்து ஆகும்.

நேபாளத்தில் கபில வஸ்து மாவட்டத்தின் அமைவிடம்

கபிலவஸ்து நகரத்தின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்தார்.

1,738 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கபிலவஸ்து மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5,71,936 ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 2,85,599 ஆகவும், பெண்கள் 286,337 ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் 91,321 வீடுகள் உள்ளது.

வரலாறு தொகு

கபிலவஸ்து கௌதம புத்தர் பிறந்த சாக்கியர் குலத்தவர்களின் நாடாகும்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

புவியியல் படி, இம்மாவட்டம் தராய் சமவெளி மற்றும் சுயுரி மலைப் பகுதிகளைக் கொண்டது.

கபிலவஸ்து மாவட்டத்தின் கிழக்கில் ரூபன்தேகி மாவட்டம், வடமேற்கில் துயுக்குரி மாவட்டம், வடக்கில் டாங் மாவட்டம் மற்றும் அர்காகாஞ்சி மாவட்டம், தெற்கில் இந்தியாவின் அவத் பகுதியின் பலராம்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[1] உயரம் பரப்பு %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 86.8%
Upper Tropical 300 - 1,000 மீட்டர் 12.0%
Subtropics 1,000 - 2,000 மீட்டர் 1.2%

கபிலவஸ்து மாவட்டத்தின் கோடைக் கால வெப்ப நிலை 27° செல்சியஸ் வரையிலும், குளிர் கால வெப்பம் 15° செல்சியசிக்கும் குறைவாக உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கபிலவஸ்து மாவட்டத்தின் மக்களில் 90% நேபாளியர்களும், 10% இந்தியக் குடியுரிமையுள்ள மக்கள் ஆவர்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்களில் அவதி பேசுபவர்கள் 80 விழுக்காடும், தாரு மொழி பேசுவோர் 5 விழுக்காடும், நேபாள மொழி பேசுவோர் 15 விழுக்காட்டினராகவும் உள்ளனர்.

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள் தொகு

 
கபிலவஸ்து மாவட்ட நகராட்சிகளையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

நகராட்சிகள் தொகு

இம்மாவட்டம் கபிலவஸ்து, பான்கங்கா, பிரிக்குடி, சிவராஜ், கிருஷ்ணா நகர், புத்த பதிகா என ஆறு நகராட்சிகளைக் கொண்டுள்ளது.

கிராம வளர்ச்சி மன்றங்கள் தொகு

இம்மாவட்டம் எழுபத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]

பொருளாதாரம் தொகு

இம்மாவட்ட மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து வாழ்கின்றனர். நெல் மற்றும் கோதுமை பயிரிடுதல் முக்கிய சாகுபடியாகும். கரும்பு பணப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்படுகிறது.

பயிர் உற்பத்தி (மெட்ரிக் டன்கள்)
நெல் > 150,000
கோதுமை 25,000-35,000
கரும்பு > 175,000
எண்ணெய் வித்துக்கள் 1,000-5,000

உலகப் பாரம்பரியக் களங்கள் தொகு

ஐக்கிய நாடுகள் சபையின் யுனேஸ்கோ நிறுவனம் அங்கீகாரம் செய்த உலகப்பாரம்பரியக் களங்களில் பல இம்மாவட்டத்தில் உள்ளது.

புத்தர் தொடர்பான 138 தொன்மையான இடங்கள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் November 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)
  2. "Nepal Census 2001". Nepal's village development committees. Digital Himalaya. Archived from the original on 12 October 2008. பார்க்கப்பட்ட நாள் 19 November 2008.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலவஸ்து_மாவட்டம்&oldid=3586486" இலிருந்து மீள்விக்கப்பட்டது