கமரன்ஸ் நோர்டே
கமரன்ஸ் நோர்டே (Camarines Norte) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், பிகோல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டாஎட் ஆகும். இது 1829 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 282 கிராமங்களும், 12 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜொனாக் பினமென்டெல் (Jonah Pimentel) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,320.07 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கமரன்ஸ் நோர்டே மாகாணத்தின் சனத்தொகை 583,313 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 55ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 51ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 250 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 36ஆம் மாகாணம் ஆகும்.
கமரன்ஸ் நோர்டே | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | பிகோல் பிராந்தியம் |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|https://www.webcitation.org/6DpMOBTiK?url=
ignored (help) - ↑ PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
- ↑ "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)