கமலா ஆறு

நேபாளத்தில் தோன்றி இந்தியாவில் ஓடும் ஆறு

கமலா ஆறு ("Kamala River") நேபாள நாட்டில் உருவாகி இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வழியாக பாய்கிறது. இந்த ஆறு நேபாளத்திலுள்ள சிந்துலி மாவட்டத்தில் சவ்வுரி மலைத் தொடரில் சுமார் 3900 அடியின் மேல் உருவாகிறது.[1][2][3] இது தெற்கு திசையில் உள்ள கமலா கோஜ் வழியாக பாய்கிறது. கமலா ஆறு தனுசா மாவட்டங்களுக்கு இடையை எல்லையை உருவாக்கிறது. இதனால் மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்படுத்துகிறது. தாவோ ஆறும் பைஜ்நாத் கோலா ஆறும் கமலா ஆறுடன் மைனி என்ற இடத்தில் இணைகிறது.[4]

கமலா ஆறு
கமலா ஆறு
அமைவு
Countryநேபாளம், இந்தியா
மாநிலம்பீகார்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமைதான் அருகே, சிந்துலியகாதி, சிந்துலி மாவட்டம், நேபாளம்
 ⁃ ஆள்கூறுகள்27°15′N 85°57′E / 27.250°N 85.950°E / 27.250; 85.950
 ⁃ ஏற்றம்1,200 m (3,900 அடி)
முகத்துவாரம்பாகமதி
 ⁃ அமைவு
பத்லகாட், ககரியா மாவட்டம், ஜான்ஜார்பூர் (மதுபனி), பீகார், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
25°33′54″N 86°35′06″E / 25.56500°N 86.58500°E / 25.56500; 86.58500
நீளம்328 km (204 mi)

கமலா ஆறு இந்தியாவினுள் பீகார் மாநிலத்தில் உள்ள ஜைநகரில் நுழைகிறது. [5] இதன் கிளைகளில் ஒன்று பாகமதி மற்றொன்று கோசி ஆறு .[6]

கமலா ஆறு பாலன் ஆற்றினை பின்பற்றுவதால் கமலா-பாலன் என்றும் அழைக்கபடுகிறது.

துணை ஆறுகள் தொகு

கமலா ஆற்றின் முக்கிய துணை ஆறுகள் தாவோ, பைஜ்நாத் கோலா, மைனாவதி, சோனி, பாலன், திரிசுலா மற்றும் சுதாகா ஆகியவை.

விபரங்கள் தொகு

கமலா ஆற்றின் மொத்த நீளம் 328 கிலோ மீட்டர் (204 மைல்) ஆகும். இதில் 208 கிலோமீட்டர் (129 மைல்) நேபாளத்திலும், மீதமுள்ள 120 கிலோமீட்டர் (75 மைல்) இந்தியாவிலும் உள்ளது. இந்த ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பரப்பளவு 7,232 சதுர கிலோ மீட்டர் (2,792 சதுர மைல்). இதில் 4,488 சதுர கிலோமீட்டர் (1,733 சதுர மைல்) இந்தியாவில் பீகாரிலும், மீதமுள்ள 2,744 சதுர கிலோமீட்டர் (1,059 சதுர மைல்) நேபாளத்திலும் உள்ளது. சராசரி ஆண்டு மழை 1,260 மில்லிமீட்டர் (50 அங்குலம்). பீகாரில் பயிர் செய்யப்பட்ட பகுதி 2,744 சதுர கிலோமீட்டர் (1,059 சதுர மைல்). பீகாரில் உள்ள கமலா படுகையின் மக்கள் தொகை 3.9 மில்லியன் ஆகும்.[7]

வெள்ளப்பெருக்கு தொகு

2003 ஆண்டில் கமலா மற்றும் அதன் துணை நதிகளில் ஏற்பட்ட வெள்ளபதிப்பால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கபட்டனர்.[8]

இந்தியாவில் இந்த வெள்ள பெருக்கால் பாதிக்கபட்ட 57 சதவீதம் பேர் பீகார் மக்களாவர். பீகாரின் மொத்த பரப்பளவில் சுமார் 73.06 சதவிதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. [9]

நேபாளத்தை ஒட்டியுள்ள பீகார் சமவெளியில் பல ஆறுகள் கடக்கின்றன. கோசி, பாகமதி மற்றும் கமலா பாலன் ஆகிய ஆறுகள் நேபாளத்தில் உருவாகி இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வழியாக பாய்கிறது.

பீகார் 1978, 1987, 1998, 2004 மற்றும் 2007 ஆண்டுகளில் பெரும் வெள்ள பெருக்கால் பாதிக்கபட்டது. 2004ஆம் ஆண்டு 23,490 சதுர கிலோமீட்டர் பகுதி பக்குரி கன்டக், கமலா, பாகமதி போன்ற ஆறுயில்கள் பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் 800 மேற்பட்டவர்கள் இறந்தனர்.[10]

கமலா பல்நோக்கு திட்டம் தொகு

கமலா பல்நோக்கு திட்டத்தின் மூலம் நேபாளத்தின் தனுசா மாவட்டம் மற்றும் சிராகா மாவட்டம் ஆகியவற்றில் கமலா ஆற்றில் சேமிப்பு கட்டப்பட்டது. இந்த திட்டத்தின் முலம் சும்மர் 30 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சக்தியை உருவாக்க முடியும். இருப்பினும் இந்த திட்டத்தினை நிறைவேற்ற பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. வடக்கு பீகார் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். 1998ஆம் ஆண்டில் தர்பங்கா என்னும் இடத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பகுதியில் பெரிய அணைகள் கட்டும் திட்டம் இதில் இடம் பெற்றுள்ளன. 1988ஆம் ஆண்டில், மதுபனி மாவட்டத்தில் கமலா ஆற்றுப் பாதை பூகம்ப விரிச்சல் காரணமாக உடைந்தது.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_ஆறு&oldid=3703017" இலிருந்து மீள்விக்கப்பட்டது