கம்பக் காற்றாலை

கம்பக் காற்றாலை (post mill) என்பது ஐரோப்பியக் காற்றாலையின் தொடக்க-கால வகையாகும். இதன் இயந்திரங்கள் அனைத்தும் ஆலையின் ஒரே செங்குத்து இடுகையில் (கம்பத்தில்) பொருத்தப்பட்டிருக்கும். ஒரு மரப்பெட்டி போன்ற வடிவத்தில் ஆலைக்கற்கள் மற்றும் இயந்திர அமைப்பும் இறுக்கி வைக்கப்பட்டிருக்கும். கம்பத்தில் பாய்கள் கட்டப்பட்டு நிலத்தில் ஊன்றப்பட்டிருக்கும். அது ஆலையினை திருப்புவதற்கான முனையாக செயல்படுவதால் காற்றினை அதுவே எதிர்கொள்ளும். சிலவற்றில், சாக்சுட்டெட் கிரீனில் உள்ளதைப் போல, அதன் கையானது ஆலையைத் தானாகத் திருப்ப ஒரு மின்விசிறியைக் கொண்டுள்ளது. மற்றவற்றில், இதன் கை ஆலையைக் காற்றில் கையால் சுழற்ற உதவுகிறது.

பிரில் காற்றாலை, பக்கிங்காம்சயரில் உள்ள ஒரு 17-ஆம் நூற்றாண்டுக் கம்பக் காற்றாலை
சாக்சுட்டெட் கிரீன், கம்பக் காற்றாலை

இங்கிலாந்தின் ஆரம்பகாலக் கம்ப ஆலைகள் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தில் இன்றும் பயன்படுத்தப்படும் தொடக்கக்கால கம்ப ஆலை சரேயில் அவுட்வுட் என்ற இடத்தில் உள்ளது. இது 1665-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1612-ஆம் ஆண்டு கட்டப்பட்ட செயல்படாத ஆலையின் எச்சங்களை கேம்பிரிட்ச்சையரில் உள்ள கிரேட் கிரான்சுடனில் காணலாம்.[1] இவற்றின் வடிவமைப்பும் பயன்பாடும் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது, பின்னர் அதிவேக நீராவி-உந்துதல் அரைக்கும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு குறைந்துவிட்டது.[2] முக்கியமாக வடக்கு ஐரோப்பா, பெரிய பிரித்தானியாவில் இன்றும் இவ்வகை காற்றாலைகள் காணப்படுகின்றன.

19-ஆம் நூற்றாண்டு வரை கோபுரக் காற்றாலைகள் அவற்றை மாற்றத் தொடங்கும் வரை கம்ப ஆலைகள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தின.[3] முந்தைய கம்ப ஆலையை விட கோபுர ஆலையின் நன்மை என்னவென்றால், முழு ஆலையையும் அதன் அனைத்து இயந்திரங்களுடன் காற்றாக மாற்ற வேண்டிய அவசியமில்லை; கோபுர ஆலைகள் இயந்திரங்களுக்கும் சேமிப்பிற்கும் அதிக இடத்தை அனுமதிக்கிறது.

கம்ப அமைப்பு தொகு

கம்பம் இரண்டு படுக்கை வச குறுக்குக் கம்புகளினால் நிறுத்தப்பட்டு அதன் முனைகளை கற்சுவர்கள் தாங்கி நிற்கின்றன. ஆலையின் முழுப்பாரமும் கற்சுவர்களுக்கு சிறுகம்புகள் அல்லது கால்கம்புகள் வழியாக செலுத்தப்படுகிறது. இந்த சிறுகம்புகள் கம்பத்துடன் இணைக்கப்பட்டு கற்சுவர்கள் மேல் குறுக்குக்கம்புகள் மேல் சாய்ந்து கொண்டிருக்கும். மேலும் இவை ‘பறவை-வாய்’ இணைப்பைக் கொண்டிருப்பதால் வழுக்கி விழாமல் இருக்கின்றன.

துணை அமைப்பு தொகு

துணை அமைப்பு முழுவதும் உருளைவடிவக் கட்டிடத்தினுள் இருப்பதால் அவை அனைத்தும் பத்திரமாக இருப்பதோடு, அதுவே எப்போதும் இருக்கும் இடமாகவும் அமைகிறது. கம்ப ஆலையின் உடல் பகுதியின் முதல் தளத்தைத் தாண்டி மேலே சென்று அங்குள்ள கிரீடக்கம்பு எனப்படும் படுக்கைவசக் கம்புடன் இணைக்கப்படுகிறது. ஆலையின் முழு உடலும், கற்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு இதன்மேல் அமைக்கப்படுகிறது. பாய்கள் போன்ற விசிறிகள் காற்று நீள் உருளைகள் மேல் ஏற்றப்பட்டிருக்கும். இந்தக் காற்று நீள் உருளைகள் சமதளத்திலிருந்து 5° முதல் 15° கோணம் வரை சாய்வாக இருக்கும். இதனால் பாய்விசிறிகள் ஆலையின் கீழ்ப் பகுதியின் மேல் மோதக்கூடிய சாத்தியம் தவிர்க்கப்படுகிறது. ஆலையின் உட்பகுதியில் காற்று நீள் உருளையின் மேல், தடுப்பிச் சக்கரம் எனப்படும் ஆலையினை நிறுத்தப்பயன்படும் தடுப்பி அமைப்பு ஏற்றப்பட்டுள்ளது. இந்த சக்கரம் கியர் சக்கரங்களுடன் இணைக்கப்பட்டு, இதன்மூலம் உந்துதல் பெறப்படுகிறது. சில நேரங்களில் கற்கள், புரள் சக்கரம் எனப்படும் அமைப்பினால் நேரடியாக உந்தப்படுகிறது. மேலும், ஆலையின் வால் முனையிலிருக்கும், அதிகப்படியான கற்களை உந்துவதற்காக, தடுப்பிச் சக்கரத்தைக் காட்டிலும் சிறியதான ஒரு இரண்டாவது சக்கரமும், காற்று நீள் உருளையின் பின்பகுதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Windmills in Huntingdon and Peterborough. p. 3.
  2. "mills" பரணிடப்பட்டது 2006-12-29 at the வந்தவழி இயந்திரம், Rural History
  3. Hills, Power from wind: a history of windmill technology, (1996), 65

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கம்ப ஆலைகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பக்_காற்றாலை&oldid=3715528" இலிருந்து மீள்விக்கப்பட்டது