கம் தாயெங்
கம் தாயெங் (Gum Tayeng) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அருணாசலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
கம் தாயெங் Gum Tayeng மேனாள் சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member அருணாசலப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
முன்னையவர் | ஜோமின் தாயெங் |
பின்னவர் | பதவியில்[1] |
பதவியில் மே 2014 – மே 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தாம்புக் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜோமின் தாயெங் |
பிள்ளைகள் | 3 மகன்கள் & 1 மகள் |
முன்னாள் கல்லூரி | Lady Keane College, சில்லாங் |
கல்வி
தொகு1962-ல் கம் தாயெங் சில்லாங்கில் உள்ள சீமாட்டி கீன் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரி கல்வியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சில காலம் பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார்.[2]
அரசியல்
தொகுஅக்டோபர் 18, 2013 அன்று தம்புக் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக அருணாச்சல பிரதேச சட்டமன்றத்திற்கு கம் தாயெங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் 2009 தேர்தலில் தம்புக் தொகுதியில் வெற்றிபெற்று எதிர்பாராத மரணத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.[3][4]
மீண்டும் 2014 சட்டப் பேரவைத் தேர்தலில் தம்புக்கில் காங்கிரசு வேட்பாளராக கம் தாயெங் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.[5] அருணாசலப் பிரதேசத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஆறு பெண்களில் இவரும் ஒருவர்.[6] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கம் தாயெங் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ The Sentinel. Congress candidate Gum Tayeng elected unopposed பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Arunachal Times. Gum Tayeng elected unopposed from Dambuk பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Post. Arunachal Pradesh: Congress candidate Gum Tayeng elected unopposed in Dambuk by-poll
- ↑ "IndiaVotes AC Summary: Dambuk 2014". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Echo of India. In Arunachal, women contest only on 6 Assembly seats
- ↑ "Gum Tayeng(Bharatiya Janata Party(BJP)):Constituency- DAMBUK(LOWER DIBANG VALLEY) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.