கயோபாக்யானம்

கயோபாக்யானம் ( Gayopakhyanam ) என்பது [1] 1890 இல் சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் என்பவர் எழுதிய தெலுங்கு நாடகம். இது பிரசண்ட யாதவம் (யாதவ மன்னன் - கிருட்டிணன் கதை) என்றும் அழைக்கப்படுகிறது. இந்து இதிகாசங்களில் புராணக் கருப்பொருள்களை முன்வைப்பதில் இந்த நாடகம் முன்னோடியாக உள்ளது . கயா என்ற கந்தர்வ மன்னனால் தூண்டப்பட்ட அருச்சுனனின் அவதாரமான நர-நாராயணனுக்கும் கிருட்டிணனுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டது கதை.

கயோபாக்யானம்
గయోపాఖ్యానం
கதைசிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம்
கதாபாத்திரங்கள்கயா
அருச்சுனன்
கிருட்டிணன்
நாரதர்
சுபத்திரை
சிவன்
வெளியீட்டு திகதிஏப்ரல் 1890
மொழிதெலுங்கு மொழி
மையம்கயாவின் கதை
கருப்பொருள்இந்து புராணம்

சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் (1867-1946) சுமார் 22 வயதில் இந்த நாடகத்தை எழுதினார். இது ஏப்ரல் 1890 இல் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. பிரபல அரசியல்வாதி த. பிரகாசம் சித்ரலேகாவாகவும் அர்ச்சுனனாகவும், கயாவாக இவரது ஆசிரியர் இம்மனேனி அனுமந்த ராவ் நாயுடுவும் நடித்தனர். இது பல நாடகக் குழுக்களால் எண்ணற்ற முறை அரங்கேற்றப்பட்டது. [2]

இது 1909 இல் நூலாக வெளியிடப்பட்டது. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான சாதனைகளை முறியடித்தது.

கயா என்ற ஒரு கந்தர்வ மன்னன், தனது தெய்வீக விமானம் மூலம் வானத்தில் பறக்கும் போது, வெற்றிலையை மென்று கீழே துப்பினார். இது சூரிய தேவனை வணங்கிகொண்டிருந்த கிருட்டிணரின் உள்ளங்கையில் விழுந்தது. இதனால் மிகவும் கோபமடைந்த கிருட்டிணன் கயாவைக் கொல்வதாக சபதம் செய்தார். கயா கிருஷ்ணரின் சிறந்த பக்தராக இருந்தும், கிருஷ்ணர் தனது சபதத்தை திரும்பப் பெற முடியவில்லை. நாரதர், அருச்சுனனை அணுகி, தன்னைப் பாதுகாப்பதற்கான உறுதியைப் பெறுமாறு அறிவுறுத்துகிறார். நாரதரின் அறிவுரையின்படி, அர்ச்சுனனின் வாக்குறுதியைப் பெறுகிறான்.

நாரதர், சுபத்திரை ருக்மணி மற்றும் பிறரின் தலையீடு இருந்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கிருட்டிணனும், அர்ச்சுனனும் நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகும் போது அங்குவந்த, சிவன் அவர்கள் முன் தோன்றி உலகத்திற்கு ஏற்படக்கூடிய பேரழிவைக் கூறி போரைத் தடுக்கிறார். வரவிருக்கும் மகாபாரதப் போருக்கு முன் அர்ச்சுனனுக்கு ஒரு சோதனையாக இந்த சூழ்நிலையை பகவான் கிருட்டிணர் விளக்குகிறார்.

விமர்சனம்

தொகு

கிருட்டிணன், அர்ச்சுனன் போன்ற பெரிய பாத்திரங்களின் உன்னதத் தன்மையைக் கவிஞர் குறைத்து இதை எழுதினார் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும், சாமானியர் மீது அதிக அக்கறை கொண்ட, வெளிப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் இயல்பான போக்கு கவிஞருக்கு உண்டு என்பதாலும், அன்றாட வாழ்வில் அவருக்குப் பரிச்சயமான பழமொழிகள் மற்றும் பழமொழிகளை நன்கு அறிந்தவர் என்பதாலும் பார்வையாளர்களின் வேர் மட்டத்தில் இவரது நாடகம் வெற்றி பெற்றது.[3]

திரைப்படமாக

தொகு

இந்தக் கதை தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு 1962/1963 இல் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதை கே.வி.ரெட்டி இயக்கினார். இதில் என். டி. ராமராவ் கிருட்டிணராகவும், அக்கினேனி நாகேஸ்வர ராவ் அர்ச்சுனாகவும், துலிபாலா கயாவாகவும் நடித்திருந்தனர்.

சான்றுகள்

தொகு
  1. Gayopakhyanam, Chilakamarti Lakshmi Narasimham by Mudigonda Veerabhadra Sastry, Sahitya Akademi, pp: 37-41.
  2. "'Gayopakhyanam' staged". தி இந்து. 2 September 2005. Archived from the original on 6 November 2012. பார்க்கப்பட்ட நாள் 28 May 2010.
  3. Sastry, Mudigonda Veerabhadra; Vi. Vi. Yal Narasiṃhārāvu; Sahitya Akademi (1994). Chilakamarti Lakshmi Narasimham. Sahitya Akademi Publications. pp. 39–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-499-5. பார்க்கப்பட்ட நாள் 28 May 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயோபாக்யானம்&oldid=3790882" இலிருந்து மீள்விக்கப்பட்டது