கரணம் பலராம் கிருஷ்ணமூர்த்தி

இந்திய அரசியல்வாதி

கரணம் பலராம் கிருஷ்ணமூர்த்தி (Karanam Balaram Krishna Murthy), (பிறப்பு 31 அக்டோபர் 1946) ஆந்திரப் பிரதேச மாநிலத்தச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். பிரகாசம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். இவர் 6 மார்ச் 2017 அன்று சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 பொதுத் தேர்தலில் சீராலா தொகுதியிலிருந்து 17,912 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார்.

கரணம் பலராம் கிருஷ்ணமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
23 மே 2019 – பதவியில்
முன்னையவர்அமஞ்சி கிருஷ்ணா மோகன்
தொகுதிசீராலா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
6 அக்டோபர் 1999 – 13 மே 2004
முன்னையவர்மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி
பின்னவர்மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி
தொகுதிஒங்கோல்
முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
6 மார்ச் 2017 – 23 மே 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 அக்டோபர் 1946 (1946-10-31) (அகவை 78)
திம்மசமுத்திரம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
துணைவர்கரணம் சரசுவதி
பிள்ளைகள்கரணம் வெங்கடேசன் (மகன்)
வாழிடம்ஒங்கோல்

இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் நீண்டகாலமாக இருந்தார். 1977 ஆம் ஆண்டு காங்கிரசில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கட்சியின் தலைவர் இந்திரா காந்தியை தாக்குதலில் இருந்து காப்பாற்றியதற்காக அறியப்பட்டார். இவர், 1978 தேர்தலில் வேட்பாளராக அட்டாங்கி தொகுதியில் போட்டியிட்டார்.[1]

விகித்த பதவிகள்

தொகு

சர்ச்சைகள்

தொகு

சட்டவிரோதக் கூட்டம், கொலை போன்ற பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர். இதைத் தவிர, அப்போதைய ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை சபாநாயகர் கே. ஆர். சுரேஷ் ரெட்டிக்கு எதிராக 'ஆட்சேபகரமான' கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில், ஆந்திர பிரதேச சட்டமன்றத்தில் இருந்து 6 மாதங்களுக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[3][4] 2009 தேர்தலில் அட்டாங்கியில் போட்டியிட மறுக்கப்பட்டது.[1][5][6][7] ஜூலை 9, 2019 அன்று, 2019 சட்டமன்றத் தேர்தலில் இவரது வெற்றியை தகுதி நீக்கம் செய்யக் கோரி அமஞ்சி கிருஷ்ண மோகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கரணம் பலராம் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என்றும் அமஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Trouble brewing for TDP in Prakasam | Hyderabad News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. 2.0 2.1 2.2 "13ap18". Archived from the original on 5 March 2013. பார்க்கப்பட்ட நாள் 16 April 2009.
  3. "The Hindu : Andhra Pradesh / Srikakulam News : Suspension of Karanam a vindictive act, says Yerran". www.hindu.com. Archived from the original on 20 September 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  4. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Panel hears contempt case against MLA". www.hindu.com. Archived from the original on 15 April 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  5. "The Hindu : Andhra Pradesh / Ongole News : Telugu Desam groups clash". www.hindu.com. Archived from the original on 16 March 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  6. "The Hindu : Andhra Pradesh / Ongole News : Former minister Kasi Reddy quits TDP". www.hindu.com. Archived from the original on 21 April 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  7. "The Hindu : Andhra Pradesh / Ongole News : Kadiri Baburao's nomination rejected". www.hindu.com. Archived from the original on 13 April 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  8. "Amanchi challengesKaranam's election". The Hindu. 9 July 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/amanchi-challenges-karanams-election/article28336208.ece. 

வெளி இணைப்புகள்

தொகு