கராச்சி கோட்டம்
கராச்சி கோட்டம் (Karachi Division) (உருது: کراچی ڈویژن ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தில் அமைந்த ஏழு கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கராச்சி நகரம் ஆகும்.
கராச்சி கோட்டம்
کراچی ڈویژن | |
---|---|
கோட்டம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | சிந்து மாகாணம் |
நிறுவப்பட்ட ஆண்டு | 2011 |
மாவட்டங்கள் | 6 |
அரசு | |
• வகை | பெருநகர மாநகராட்சி |
• மேயர் | ரவுப் அக்தர் பரூக்கி |
• ஆணையாளர் | சஜ்ஜஜ் உசைன் அப்பாசி |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம் PST) |
அஞ்சல் சுட்டு எண் | 74XXX - 75XXX |
தொலைபேசி குறியிடு எண் | 021 |
வரலாறு
தொகுமுந்தைய கராச்சி கோட்டம் 2000-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, அதன் ஐந்து மாவட்டங்களைக் கொண்டு கராச்சி நகர மாவட்டம் துவக்கப்பட்டது. கராச்சி நகர மாவட்டம் 18 ஊர்களாகவும், 178 கிராமக் ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டது. [1]
பின்னர் 11 சூலை 2011-இல் சிந்து மாகாண அரசு ஐந்து மாவட்டங்கள் கொண்ட கராச்சி கோட்டம் துவக்கியது. [2]
நவம்பர் 2013-இல் கராச்சி மாவட்டத்தில் சில பகுதிகளை கொண்டு கொராங்கி மாவட்டத்தை உருவாக்கி அதனை கராச்சி கோட்டத்தில் இணைக்கப்பட்டது. [3][4]
கோட்ட நிர்வாகம்
தொகுகராச்சி கோட்டத்தை நிர்வாக வசதிக்காக கராச்சி தெற்கு மாவட்டம், கராச்சி சதர் மாவட்டம், கராச்சி கிழக்கு மாவட்டம், கராச்சி மேற்கு மாவட்டம், கராச்சி மத்திய மாவட்டம், மலிர் மாவட்டம் மற்றும் கொராங்கி மாவட்டம் என ஆறு மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ City District Government Karachi பரணிடப்பட்டது 2013-10-15 at the வந்தவழி இயந்திரம் Official Website
- ↑ Five districts of Karachi restored, Published in The News International on 11 July 2011, Retrieved on 5 August 2012
- ↑ dawn.com, Korangi notified as sixth district of Karachi
- ↑ The News, Korangi made sixth district of Karachi