கரிமப் பாம்பு

கரிமப் பாம்பு (carbon snake) என்பது அடர் கந்தக அமிலத்தால் சர்க்கரையின் நீரகற்றும் வேதிவினைக்கு ஒரு செயல்விளக்கம் ஆகும். அடர் கந்தக அமிலத்துடன் (H2SO4) படிக உணவுச் சர்க்கரை (கரும்புச்சர்க்கரை அல்லது சுக்குரோசு) உடனான படிச்சிதைவு வேதிவினையின் போது, கருப்பு நிற திட-திரவ கலவையாக வடிவம் மாறுகிறது.[1] கரிமப் பாம்பு பரிசோதனை சில நேரங்களில் கருப்பு பாம்பு, சர்க்கரை பாம்பு அல்லது எரியும் சர்க்கரை என தவறாக அடையாளம் காணப்படுகிறது. இது அடர் கந்தக அமிலத்திற்கு பதிலாக சமையல் சோடாவுடன் வேதிவினைக்கு உட்படுத்தப்படுகிறது.

A column of porous graphite formed during the experiment.
கரிமப் பாம்புப் பரிசோதனை

வேதியியல் விளக்கம் தொகு

C12H22O11 (s) + H2SO4 (aq) + 1/2 O2 (g) → 11 C (s) + CO2 (g) + 12 H2O (g) + SO2 (g)

சுக்ரோசிலிருந்து நீரகற்றப்பட்டால், சுற்றுப்புறத்திற்கு வெப்பம் வெளியிடப்படுகிறது. எனவே இது வெப்பம் விடு வினை ஆகும். மேலும், எழுதுகரி மற்றும் திரவ நீர் உற்பத்தி ஆவதால் சர்க்கரை சிதைத்தல் நடைபெறுகிறது என அறியலாம்:[2]

C12H22O11 (s) → 12 C (s) + 11 H2O (l)

அமிலம் சுக்ரோசை நீரகற்றும் போது, நீரை உற்பத்தி பொருளாக வெளியிட்டு கந்தக அமிலத்தை நீர்த்துப்போகச் செய்வதோடு, ஆற்றலை வெப்ப வடிவில் வெளியிடுகிறது.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Shakhashiri, Bassam Z.; Shreiner, Rodney; Bell, Jerry A. (2011). "1.32 Dehydration of Sugar by Sulfuric Acid". Chemical Demonstrations a handbook for teachers of chemistry volume 1. University of Wisconsin press. pp. 77–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-299-08890-3.
  2. Roesky, Herbert W. (2007). "Experiment 6: Sugar coal by splitting off water from sugar with sulfuric acid". Spectacular Chemical Experiment. Wiley. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-31865-0.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமப்_பாம்பு&oldid=2401178" இலிருந்து மீள்விக்கப்பட்டது