கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான்
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் ( Grey-headed canary-flycatcher ) என்பது வெப்பமண்டல ஆசியாவில் காணப்படும் சிறிய ஈபிடிப்பான் பறவை இனமாகும். இது சதுரமாகன உச்சந்தலை, கருஞ்சாம்பல் தலைமுடி மற்றும் மஞ்சள் நிற அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. இவை முக்கியமாக காடுகளை வாழ்விடங்களாக கொண்டுள்ளன. அங்கு இவை பெரும்பாலும் மற்ற பறவை இனங்களுடன் கூட்டமாக சேர்ந்து உணவு தேடுகின்றன. பல துணையினங்கள் இவற்றின் பரந்த வாழிட வரம்பிற்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் குலிசிகாபா பேரினமானது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்தவையாக கருதப்பட்டது. ஆனால் ஆய்வுகளில் அவை ஸ்டெனோஸ்டிரிடே அல்லது ஆப்பிரிக்க இனவகைகளான ஸ்டெனோஸ்டிரா மற்றும் எல்மினியாவை உள்ளடக்கிய தேவதை ஈப்பிடிப்பான் என்னும் புதிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கண்டறிந்துள்ளன.
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் | |
---|---|
தாய்லாந்தின் மே வோங் தேசிய பூங்காவில் முதிர்ந்த பறவை | |
Call (recorded in southern India) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Culicicapa |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CulicicapaC. ceylonensis
|
இருசொற் பெயரீடு | |
Culicicapa ceylonensis (Swainson, 1820) | |
வேறு பெயர்கள் | |
Platyrhynchus ceylonensis (protonym) |
விளக்கம்
தொகுகருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் சுமார் 12–13 செமீ (4.7–5.1 in) நீளமான உடலும், சதுர வடிவத்தை ஒத்த தலை, சாம்பல் தலைமுடி, மஞ்சள் வயிறு, பசுமை தோய்ந்த மஞ்சள் மேல் பகுதியைக் கொண்டுள்ளது.[2] இவை மிகவும் சுறுசுறுப்பாக மரங்களில் உயர புழுபூச்சிகளைத் துரத்திப் பிடித்தபடி இருக்கும். இறகுகளின் நிறத்தைக் கொண்டு பாலினங்களை பிரித்தறிய முடியாது.[3] இவை மிகவும் தட்டையான அலகைக் கொண்டுள்ளன (இதுவே பிளாட்டிரிஞ்சஸ் என்ற முந்தைய பேரினப் பெயருக்கு காரணமாயிற்று) இது மேலே இருந்து பார்க்கும் போது சமபக்க முக்கோணம் போல தோன்றும்.[4][5]
இவற்றின் வாழிட வரம்பில், காணப்படும் பறவைகள் அதன் நிறங்களின் திட்டுக்களில் வேறுபடுகின்றன. மேலும் பரிமாணங்களிலும் சிறிது வேறுபடுகின்றன. அதனால் இவற்றில் பல துணையினங்கள் பரிந்துரைக்கபட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள் தீபகற்ப இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், நீலமலை, மத்திய இந்தியா [6] மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (லம்மசிங்கி [7] ), இலங்கை ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. 1923 ஆம் ஆண்டில் ஹாரி ஓபர்ஹோல்சரால் விவரிக்கப்பட்ட கலோக்ரிசியா என்ற துணையினம் இமயமலைக்கு கிழக்கே மியான்மர் மற்றும் தாய்லாந்து மற்றும் தென்னிந்தியா முழுவதும் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஓபர்ஹோல்சரால் விவரிக்கப்பட்ட ஆன்டிஆக்சாந்தாவின் துணை இனம் தெற்கு பர்மா, தாய்லாந்து முதல் மலேசியா வழியாக சாவகம் மற்றும் பாலி வரை இனப்பெருக்க எல்லையைக் கொண்டுள்ளது. 1897 இல் எர்ன்சுட் ஆர்டெர்ட்டால் விவரிக்கப்பட்ட தீவு வாழ் பறவைகள் செஜுங்க்டா சும்பாவா, புளோரஸ் மற்றும் லோம்போக்கில் காணப்படுகிறது, அதே சமயம் 1931 இல் பெர்ன்ஹார்ட் ரென்ஸ்ச் விவரித்த பறவைகள் சும்பா தீவில் வாழ்கின்றன.[8]
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் அதன் புதுமையான உச்சி, வண்ணங்கள், குரலின் தன்மை போன்றவற்றைக் கொண்டிருந்தபோதிலும் பழைய உலக ஈப்பிடிப்பான், குடும்பத்தைச் சேர்ந்ததாக முன்னர் கருதப்பட்டது. இருப்பினும், மூலக்கூறு சாதிவரலாறு ஆய்வுகள், இவை முற்றிலும் வேறுபட்டவை என்றும், இவை ஸ்டெனோஸ்டிரிடே குடும்பத்தில் வைக்கப்பட்டன.[9][10]
வாழ்விடமும் பரவலும்
தொகுஇந்த இனமானது பாக்கித்தான், மத்திய இந்தியா, வங்காளதேசம் இலங்கையிலிருந்து கிழக்கே இந்தோனேசியா மற்றும் தெற்கு சீனா வரையிலான வெப்ப மண்டல முதவெப்பமண்டல தெற்காசியா வரையிலான நிலப்பரப்பில் உள்ள மொன்டேன் ஓக் (குவெர்கஸ்) மற்றும் பிற, பரந்த இலைகள் கொண்ட காடுகள் மற்றும் இதே போன்ற மரங்கள் நிறைந்த பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. பல பறவை துணையினங்கள் ஒரே இடத்தில் வசிப்பறவையாக உள்ளன. ஆனால் சில இமயமலைப் பறவைகளின் ஒரு பகுதி குளிர் காலத்தில் தீபகற்ப இந்தியப் பகுதிகளுக்கு வலசை போகின்றன.[11][12] பூட்டான் போன்ற கிழக்கு இமயமலைப் பகுதிகளில், இவை ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. மேலும் அவை கடல் மட்டத்தில் இருந்து 2,000 மீ வரையும் அதற்கு மேலும் காணப்படுகின்றன.[13] இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில், சமவெளிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் (செப்டம்பர் முதல் மார்ச் வரை) காணப்படுகின்றன.[2]
நடத்தையும் சூழலியலும்
தொகுகருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் ஒரு பூச்சியுண்ணி ஆகும். இது மரத்தின் மேலே ஒரு தாழ்வான இடத்தில் இருந்து பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்கிறது. இது இணையாக உணவு தேடும். பெரும்பாலும் பூச்சி உண்ணும் பிற பறவைகளுடன் கூட்டமாக சேர்ந்து உணவு தேடும்.[14][15] இவை கோடையில் இனப்பெருக்கம் செய்கின்றன (ஏப்ரல் முதல் சூன் வரை இந்தியாவில் மற்றும் மேற்கு சீனாவில் [16] ). பெண் பறவையானது சிறு கோப்பை வடிவிலாக கூட்டினைப் பாசி பிடித்த மரக்கிளையில் மரக்காளான், மரப்பாசி ஆகியன கொண்டு தரையிலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில் சிலந்தி நூல்களைக் கொண்டு கட்டும்.[17] பொதுவாக மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும்.[18] வடக்கு போர்னியோவில் இந்த இனத்தின் கூடுகளில் Hodgson's hawk-cuckoo குயில் முட்டை இடுவது கண்டறியப்பட்டது.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Culicicapa ceylonensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22709596A94215839. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709596A94215839.en. https://www.iucnredlist.org/species/22709596/94215839.
- ↑ 2.0 2.1 Clement, P. (2006).
- ↑ Handbook of the birds of India and Pakistan. Volume 7. Laughing Thrushes to the Mangrove Whistler.
- ↑ Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume 2.
- ↑ Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume 2.
- ↑ Osmaston, BB (1922). "Birds of Pachmarhi". J. Bombay Nat. Hist. Soc. 28 (2): 453–459. https://www.biodiversitylibrary.org/page/30113035#page/593/mode/1up.
- ↑ Price, Trevor D (1979). "The seasonality and occurrence of birds in the Eastern Ghats of Andhra Pradesh". J. Bombay Nat. Hist. Soc. 76 (3): 379–422. https://www.biodiversitylibrary.org/page/48240774.
- ↑ Deignan, H. G. (1947). "The Races of the Gray-Headed Flycatcher [Culicicapa Ceylonensis (Swainson)"]. The Auk 64 (4): 581–584. doi:10.2307/4080717. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v064n04/p0581-p0584.pdf.
- ↑ Johansson, Ulf S; Fjeldsa, J; Bowie, RCK (2008). "Phylogenetic relationships within Passerida (Aves: Passeriformes): A review and a new molecular phylogeny based on three nuclear intron markers". Molecular Phylogenetics and Evolution 48 (3): 858–876. doi:10.1016/j.ympev.2008.05.029. பப்மெட்:18619860. http://www.nrm.se/download/18.7d9d550411abf68c801800015111/Johansson+et+al+Passerida+2008.pdf. பார்த்த நாள்: 2023-10-23.
- ↑ Barker, F. Keith; Cibois, Alice; Schikler, Peter A.; Feinstein, Julie; Cracraft, Joel (2004). "Phylogeny and diversification of the largest avian radiation". Proceedings of the National Academy of Sciences 101 (30): 11040–11045. doi:10.1073/pnas.0401892101. பப்மெட்:15263073. Bibcode: 2004PNAS..10111040B.
- ↑ Joshua, J. Soni; H. Joshi; N. M. Joshi; P. N. Deiva, O. (2005). "Occurrence of Grey-headed Canary Flycatcher Culicicapa ceylonensis (Swainson) in Jamnagar district, Gujarat, India". J. Bombay Nat. Hist. Soc. 102 (3): 340. https://www.biodiversitylibrary.org/page/48376005.
- ↑ Whistler, Hugh (1914). "The Grey-headed Flycatcher Culicicapa ceylonensis, Swainson". Journal of the Bombay Natural History Society 22 (4): 795. https://www.biodiversitylibrary.org/page/30155836.
- ↑ Birds of South Asia. The Ripley Guide. Volume 2.Rasmussen, PC; Anderton, JC (2005).
- ↑ Kotagama, Sarath W.; Goodale, Eben (2004). "The composition and spatial organisation of mixed-species flocks in a Sri Lankan rainforest". Forktail 20: 63–70. http://birdingasia.org/wp-content/uploads/2012/09/Kotagama-Flocks.pdf.
- ↑ Partridge, L.; Ashcroft, R. (1976). "Mixed-species flocks of birds in hill forest in Ceylon.". Condor 78 (4): 449–453. doi:10.2307/1367093. http://sora.unm.edu/sites/default/files/journals/condor/v078n04/p0449-p0453.pdf.
- ↑ Bangs, Outram (1932). "Birds of western China obtained by the Kelley-Roosevelts expedition". Field Mus. Nat. Hist. Zool. Ser. 18 (11): 343–379. https://archive.org/stream/birdsofwesternch1811bang#page/352/mode/1up.
- ↑ Inglis, Charles M (1949). "Unrecorded nesting sites of the Greyheaded Flycatcher [Culicicapa ceylonensis ceylonensis (Swainson)"]. Journal of the Bombay Natural History Society 48 (2): 359. https://www.biodiversitylibrary.org/page/48731847.
- ↑ Wait, WE (1922). "The passerine birds of Ceylon.". Spolia Zeylanica 12: 22–194 [122]. https://www.biodiversitylibrary.org/page/14917001#page/108/mode/1up.
- ↑ Sharpe, RB (1890). "On the Ornithology of Northern Borneo. Part V.". Ibis 32: 1–24. doi:10.1111/j.1474-919X.1890.tb06461.x. https://archive.org/stream/ibis621890brit#page/10/mode/2up/.