கருஞ்சிறுத்தை
கருஞ்சிறுத்தை (Black panther) இது ஒரு மைக்கருமை நிறம் கொண்ட புலி வகையைச் சார்ந்த பூனைக்குடும்பத்தில் உள்ள சிறுத்தை இனம் ஆகும். இவ்வினங்கள் பொதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா, போன்றவற்றில் வாழும் இவை சிறுத்தைகள் என்றும் அமெரிக்காப் பகுதியில் வாழுபவை சிறுத்தைப்புலி வகையிலும் சேர்க்கப்படுகிறது.

நெப்ராஸ்கா விலங்கு காட்சியகத்தில் கருஞ்சிறுத்தைகளில் ஒன்று
மைக்கருமை நிறமுடைய இவை மரபியல் படி தோற்றத்தின் மூலம் சிறுத்தைப்புலி போல் தோன்றினாலும் சிறுத்தையாகும். கருப்பு பூனையைப் போல் தோன்றினாலும் கருப்பு மிருதுவான பட்டுத் துணி போன்ற தோல் பகுதியைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் கண்கள் தங்கம் போன்று காட்சி கொடுப்பவையாகும்.
இவை அடர்ந்த மழைக்காட்டுப்பகுதியில் சூரிய ஓளி அதிகம் காணப்படாத இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. [1]
மேலும் பார்க்கதொகு
வெளி இணைப்புதொகு
- Photographs of a melanistic bobcat and a melanistic jaguar – Florida Fish and Wildlife Conservation Commission
- Mutant Leopards, Mutant Jaguars and Mutant Pumas (text licensed under GFDL)
மேற்கோள்கள்தொகு
- ↑ கருப்புடா!தி இந்து 17 செப்டம்பர் 2016