கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை

கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை (Compassion International) இந்த அறக்கட்டளையின் குறிக்கோளுரை இயேசு கிறிஸ்துவின் பெயரால் வறுமையிலிருந்து குழந்தைகளை விடுவித்தல் என்பதாகும். இதன் தலைமையிடம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொலராடோ மாநிலத்தில் உள்ள கொலராடா ஸ்பிரிங்ஸ் எனும் நகரம் ஆகும். 2019-ஆம் ஆண்டு முடிய, இந்த அமைப்பு குறைந்தது பத்து நாடுகளிலிருந்து நன்கொடைகளை ஒருங்கிணைத்தது, பொலிவியா, கொலம்பியா, மெக்சிகோ, ஹைத்தி மற்றும் கென்யா உள்ளிட்ட 25 வறிய நாடுகளில் குழந்தைகளுக்கான பருவத் திட்டங்களை இயக்குகிறது. மேலும் இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இதன் திட்டங்களில் பயன் பெறுகின்றனர்.

கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை
Compassion International
நிறுவனர்கள்எவரெட் சுவான்சன்
வகைபன்னாட்டு அளவில் ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் கிறித்துவ தொண்டு நிறுவனம்
நிறுவப்பட்டது1952
தலைமையகம்கொலராடா ஸ்பிரிங்ஸ், கொலராடோ மாநிலம் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வேலைசெய்வோர்சாண்டியகோ ஜிம்மி மெல்லெடோ (தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)
சேவை புரியும் பகுதி4 கண்டங்களில் 25 நாடுகள்
வருமானம்US$ 1,001,200,000 (2020)[1]
Mottoஇயேசுவின் பெயரால் வறுமையிலிருந்து குழந்தைகளை விடுவித்தல்

அரசியல் பொருளாதார இதழில், இந்த அறக்கட்டளை பூர்வாங்க சுயாதீனமான, மதச்சார்பற்ற ஆராய்ச்சி, பங்கேற்பாளரின் பள்ளி முடிந்த ஆண்டுகளில், பின்னர் வேலைவாய்ப்பின் நிகழ்தகவு மற்றும் தரம் ஆகியவற்றில் பெரிய மற்றும் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளது.

பன்னாட்டு கருணை அறக்கட்டளை மூலம் உலக அளவில் 2 மில்லியன் குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுகின்றனர்.[2]

இந்தியாவில்

தொகு

இந்தியாவில் கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை, 30 ஆண்டுகளாக இந்தியாவின் 344 கிறிஸ்துவ அரசு சார்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து ரூபாய் 2,292 கோடி நிதியுதவியுடன் இயங்கியது. 2017-ஆம் ஆண்டில் 2010 வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக இந்திய அரசுக்கும், அமெரிக்க ஐக்கிய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னையைச் சேர்ந்த கருணா பால் விகாஸ் அறக்கட்டளை மற்றும் கருணை கிழக்கு இந்தியா அறக்கட்டளைகளை உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு பட்டியலில் சேர்த்தது. கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை நிறுவனம், கிறிஸ்துவ மத நடவடிக்கைகளுக்காக, பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மார்ச், 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது. [3][4]

குழந்தைகளுக்கான திட்டங்கள்

தொகு

குழந்தைகளுக்கு, குறிப்பாக ஆதி வாசி குழந்தைகளுகு உணவு, உறைவிடம், குடி நீர், மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்குவதுடன் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை ஏற்பட இந்த அறக்கட்டளை உள்ளூர் கிறித்துவத் திருச்சபைகள் நடத்தும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்த அறக்கட்டளை ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு 38 அமெரிக்க டாலர் வீதம் செலவு செய்கிறது.[5]

மதிப்பீடுகள்

தொகு

கிறிஸ்துவ போதனைகளை பன்னாட்டு அளவில் பரப்பும் நிதிக் குழுவில்[6] [7][8]உள்ள இந்த அறக்கட்டளை, தனது அறக்கட்டளை நிதிகளுக்கு தரமான கணக்குகளை வைத்துள்ளது என பெட்ட பிசினஸ் பீரேவால் பாரட்டப்பட்டது.[9]2013-இல் அரசியல் பொருளாதாரம் எனும் இதழின் அறிக்கைப்படி, கருணைகான பன்னாட்டு அறக்கட்டளை ஆதரவற்ற குழந்தைகளை கருணையுடன் வளர்ப்பதோடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பும் வழங்குவதாக பாராட்டியுள்ளது.[10][11]

2016-இல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை 799 மில்லியன் டாலர்களுடன் 15-வது பெரிய அறக்கட்டளை என போர்ஸ் இதழ் தரவரிசைப்ப்படுத்தப்பட்டுள்ளது[12]

செயல்படுமிடங்கள்

தொகு

கருணைக்கான பன்னாட்டு அறக்கட்டளை (ஆஸ்திரேலியா)

தொகு

ஆஸ்திரேலியாவில் ஆதரவற்ற பூர்வ குடிகளின் கிறித்துவக் குழந்தைகளை வளர்க்கவும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கவும் ஆஸ்திரேலியா கருணைகான பன்னாட்டு அறக்கட்டளை, உள்ளூர் கிறித்துவச் சபைகளின் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "ACCOUNTABILITY REPORT" (PDF). Compassion.com. பார்க்கப்பட்ட நாள் December 6, 2020.
  2. "Two Million Now Registered in Ministry's Child Development Program". Compassion.com. பார்க்கப்பட்ட நாள் January 14, 2019.
  3. Compassion International to shut down India operations
  4. Major Christian Charity Is Closing India Operations Amid a Crackdown
  5. "Two Million Now Registered in Ministry's Child Development Program". Compassion.com. பார்க்கப்பட்ட நாள் January 14, 2019.
  6. "Meet ECFA's Charter Members". ECFA. பார்க்கப்பட்ட நாள் January 7, 2020.
  7. Daniel Borochoff (February 20, 2008). "American Institute of Philanthropy at". Charitywatch.org. பார்க்கப்பட்ட நாள் March 10, 2014.
  8. "Ratings and Metrics: Compassion International at". Charitywatch.org. பார்க்கப்பட்ட நாள் January 15, 2019.
  9. "give.org". give.org. Archived from the original on June 3, 2008. பார்க்கப்பட்ட நாள் January 31, 2012.
  10. Wydick, Bruce; Glewwe, Paul; Rutledge, Laine (2013), "Does International Child Sponsorship Work? A Six-Country Study of Impacts on Adult Life Outcomes", Journal of Political Economy, The University of Chicago, 121 (2): 1–8, CiteSeerX 10.1.1.546.2784, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/670138, JSTOR 10.1086/670138
  11. Wydick, Bruce (June 14, 2013). "Want to Change the World? Sponsor a Child". Christianity Today. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.
  12. William P. Barrett, The Largest U.S. Charities For 2016, forbes.com, USA, December 14, 2016

வெளி இணைப்புகள்

தொகு