கருத்தராஜாபாளையம்
கருத்தராஜாபாளையம் (Karutharajapalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லியகரை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
கருத்தராஜாபாளையம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636107[1] |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த சன்னாசி வரதன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் சுமார் 220 குடியிருப்புகளில் 700 பேர் வசிக்கின்றன.
ஊரின் தனிச்சிறப்பு
தொகுகருத்தராஜாபாளையத்தில் ஓட்டு வீடு, குடிசை வீடு வீடு, கல்நார் தகடு வீடு போன்றவற்றை பார்க்க முடியும், ஆனால் காங்கிரீட் வீடு ஒன்றையும் காண இயலாது. இந்த ஊரின் காவல் தெய்வங்களான கருப்பசாமியும், பெரியசாமியும் திறந்த வெளியில் உள்ளதால் தாங்கள் காரை வீட்டில் இருக்கக்கூடாது என்பதால் காங்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொல்வதில்லை. 1996இல் தமிழ்நாடு அரசு ஊரில் குடிசை வீடுகளுக்கு பதிலாக 32 தொகுப்பு வீடுகளைக் கட்டித்தந்தது. ஆனால் தெய்வக்குற்றம் ஏற்பட்டதால் அவர்கள் அந்த வீடுகளின் காங்கிரீட் கூரையை அகற்றிவிட்டு ஓடுகளை வேய்ந்து கொண்டனர்.[2]
இரவில் காவல் தெய்வமான பெரியசாமி வேட்டைக்குச் சென்று தீய சக்திகளிடமிருந்து ஊரைக் காப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் பெரியசாமிக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் வீடுகளில் மின் விளக்கை பயன்படுத்துவது இல்லை. சாமிக்கு இடைஞ்சலாக ஒலி எழும்பக் கூடாது என்பதற்காக ஊரில் தச்சர், குயவர்கள் இல்லை. அதுமட்டுமல்லாது தொட்டில் சத்தம் சாமிக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தொட்டில் கட்டாமல் குழந்தைகளை தரையிலிலேயே படுக்க வைக்கின்றனர். ஊருக்குள் புதியதாக வருபவர்களும், உறவினர்களும் இரவில் தங்குவதில்லை. காவல் தெய்வத்தின் கட்டளையை மீறினால் அவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் என்றும், ஆண் வாரிசு இல்லாமல் போய்விடும் என்று ஊர் மக்கள் அஞ்சுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karutharajapalayam, Salem PIN Code". pincodedata.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
- ↑ "அரசு வீடு வேண்டாம்; மெத்தை வீடு தெய்வ குற்றம்: கூரை, ஓடு வீடுகளில் மட்டும் வாழும் கிராம மக்கள்". Dinamalar. 2019-10-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.