கருப்பைவாய் புறவணியிழையிடை புதுப்பெருக்கு

கருப்பைவாய் புறவணியிழையிடைப் புதுப்பெருக்கு (Cervical intraepithelial neoplasia, CIN), அல்லது கருப்பைவாய் இயல்பிறழ் வளர்ச்சி , கருப்பைவாய் இடைநார்த்திசு இயல்பிறழ் வளர்ச்சி என்று கருப்பைவாயின் மேற்புறத்திலுள்ள செதிள் உயிரணுக்களின் இயல்பிற்கு மாறான பெருக்கமும் புற்றுநோய் வர வாய்ப்புள்ள மாறுதல்களும் குறிப்பிடப்படுகின்றன.[1] இந்த நிலை புற்றுநோய் அல்ல; மேலும் பொதுவாக குணமாக்கக் கூடியவை.[2] மிகப் பெரும்பாலான பேருக்கு நிலையாக இருக்கிறது அல்லது நோயாளியின் நோய் எதிர்ப்பாற்றலால் எந்தவொரு சிகிட்சையுமின்றி சரியாகி விடுகிறது. இருப்பினும் மிகக் குறைந்த பேருக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயாக உருவெடுக்கிறது.[3] பால்வினை மூலம் உட்புகுந்த மனித சடைப்புத்துத் தீ நுண்மங்களால் (HPV) (குறிப்பாக உயர் நேரிடர் எச்பிவி வகைகள் 16 அல்லது 18), கருப்பைவாய் நெடுநாட்களான நோய்த்தொற்று இந்த நோய்க்கான முதன்மையான காரணியாக அறியப்படுகிறது.

கருப்பைவாய் புறவணியிழையிடைப் புதுப்பெருக்கு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
ஐ.சி.டி.-10D06., N87.
ஐ.சி.டி.-9233.1, 622.10
ம.பா.தD018290

மேற்கோள்கள் தொகு

  1. Kumar, Vinay; Abbas, Abul K.; Fausto, Nelson; & Mitchell, Richard N. (2007). Robbins Basic Pathology (8th ). Saunders Elsevier. பக். 718–721. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4160-2973-1. 
  2. "Cervical Dysplasia: Overview, Risk Factors". Archived from the original on 2011-05-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.
  3. Agorastos T, Miliaras D, Lambropoulos A, Chrisafi S, Kotsis A, Manthos A, Bontis J (2005). "Detection and typing of human papillomavirus DNA in uterine cervices with coexistent grade I and grade III intraepithelial neoplasia: biologic progression or independent lesions?". Eur J Obstet Gynecol Reprod Biol 121 (1): 99–103. doi:10.1016/j.ejogrb.2004.11.024. பப்மெட்:15949888.