சாம்பல்நிற வாலாட்டிக் குருவி
(கரும் சாம்பல் வாலாட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாம்பல்நிற வாலாட்டிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. cinerea
|
இருசொற் பெயரீடு | |
Motacilla cinerea Tunstall, 1771 | |
வேறு பெயர்கள் | |
Motacilla melanope |
சாம்பல்நிற வாலாட்டிக்குருவி (Grey Wagtail, Motacilla cinerea) வாலாட்டிகள் இனத்தைச் சேர்ந்த சிறு பறவை ஆகும். ஒட்டு மொத்தமாக இக்குருவியின் நீலம் 18 முதல் 19 செ.மீ வரை இருக்கும். இதன் தோற்றம் மஞ்சள் நிற வாலாட்டியைப் போன்று இருப்பினும் இப்பறவையின் கழுத்தும் புழைப்பகுதியுமே மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்பறவைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகின்றன. சேற்று நிலங்களில் நடந்து செல்லும் இவை அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.
ஏப்ரல் முதல் ஜூலை வரை இவற்றின் இனப்பெருக்க காலம். வேகமாக ஓடும் ஆற்றின் ஓடைகளின் அருகே இவை கூடு கட்டியிருக்கும். 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.