கர்மாலா
கர்மாலா (Karmala), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது சோலாப்பூருக்கு வடகிழக்கே 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்நகரம் கர்மாலா தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது 30.82 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
கர்மாலா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் கர்மாலா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°25′N 75°12′E / 18.42°N 75.2°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
தாலுகா | கர்மாலா |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 30.82 km2 (11.90 sq mi) |
ஏற்றம் | 562 m (1,844 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 23,199 |
• அடர்த்தி | 750/km2 (1,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்திய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413203 |
தொலைபேசி குறியீடு எண் | 02182 |
வாகனப் பதிவு | MH-45 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 17 வார்டுகள் கொண்ட கர்மலா நகராட்சியின் மக்கள் தொகை 23,199 ஆகும். அதில் ஆண்கள் 11,905 மற்றும் 11,294 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 949 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 87% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,535 மற்றும் 430 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 17,291 (74.53%), இசுலாமியர் 4,572 (19.71%), பௌத்தர்கள் 52 (0.22%), சமணர்கள் 1,087 (4.69%), மற்றும் பிறர் 1.04 % ஆகவுள்ளனர்.[2]